Tamil News
Home உலகச் செய்திகள் பாகிஸ்தான் நீதிமன்றால் தேடப்படும் குற்றவாளியாக நவாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் நீதிமன்றால் தேடப்படும் குற்றவாளியாக நவாஸ் ஷெரீப்

சொகுசு வாகனங்கள் வாங்கியதில் ஊழல் செய்ததாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

உடல்நலக் குறைவிற்கு உள்ளான அவர் லண்டனில் சிகிச்சை பெற்று வருகின்றார். பிணைக்காலம் முடிவடைந்த நிலையில், அவரை நாடு திரும்பி நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என்று நீதிமன்றம் கெடு விதித்தது,

அவர் நீதிமன்றில் முன்னிலையாகாத நிலையில், அவரை தேடப்படும் குற்றவாளி என்று நீதிமன்றம் நேற்று அறிவித்தது. லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் மூலம் பிடிவிறாந்து பிறப்பிக்கும்படியும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் அவரின் சொத்துக்களை முடக்கவும் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இந்த வழக்கில் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, முன்னாள் பிரதமர் யூசுப் ரசா கிலானி ஆகியோர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Exit mobile version