பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐ தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் பியாஸ் ஹமீது நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இராணுவ மேஜர் ஜெனரலாக இருந்து கடந்த ஏப்ரலில் லெப்டினன்ட் ஜெனரலாக பதவியுயர்த்தப்பட்டு ஓய்வு பெற்றார்.
அதன் பின்னர் தலைமையக துணை ஜெனரலாக நியமிக்கப்பட்டார். மேலும் ஏற்கனவே ஐஎஸ்ஐயின் உள்நாட்டு பாதுகாப்புத் தலைவராக பணிபுரிந்துள்ளார். அத்துடன் இராணுவத் தலைமை ஜெனரல் குமார் பஜ்வாவிற்கு மிகவும் நெருக்கமானவர்.
இதுவரை ஐஎஸ்ஐ தலைவராக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் ஆசிம் முனீர் திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாகவே லெப்.ஜெனரல் பியாஸ் ஹமீத் ஐஎஸ்ஐ தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த அக்டோபரில் ஐஎஸ்ஐ தலைவராக பதவியேற்ற நவீத் முக்தர் ஓய்வு பெற்றதையடுத்து ஆசிம் முனீர் நியமிக்கப்பட்டார். தற்போது அவர் மாற்றப்பட்டதனாலேயே பியாஸ் ஹமீத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.