Tamil News
Home செய்திகள் பலாலி விமானநிலையம் VCCJ என்ற குறியீட்டு இலக்கத்துடன் சர்வதேச...

பலாலி விமானநிலையம் VCCJ என்ற குறியீட்டு இலக்கத்துடன் சர்வதேச விமானநிலையமாகிறது.

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க சமர்ப்பித்த பரிந்துரை அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதேச விமான நிலையமாக இருந்து வந்த யாழ்ப்பாண பலாலி விமான நிலையம் பிராந்திய மற்றும் சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யும் பணி  கடந்த ஜுலை மாதம் 5 ஆம் திகதி ஆரம்பமானது.

இந்த அபிவிருத்தி பணிகள் இந்த மாதம் 10 ஆம் திகிதி அளவில் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. பலாலி சர்வதேச விமான நிலையத்தின் விமான சேவைகளுக்காக  எதிர்வரும் 17 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னராக ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 கட்டங்களின் கீழ் அபிவிருத்தி செய்யப்படும் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் சர்வதேச சிவில் விமான சேவை நிறுவனத்தின் குறியீட்டு இலக்கம் (ICAO CODE) என்பது VCCJ ஆகும். சர்வதேச விமான சேவைகள் சங்கத்தின் குறியீட்டு இலக்கம் (IATA) என்பது JAF ஆகும்.

இந்த பெயருக்கு அமைவாக மட்டக்களப்பு விமான நிலையம் மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையமாகவும், சர்வதேச சிவில் விமான சேவை நிறுவன குறியீட்டு இலக்கம் VCCB ஆவதுடன், சர்வதேச விமான சேவைகள் சங்கத்தின் குறியீட்டு இலக்கம் BTC என்பதாகும்.

கொழும்பு இரத்மலான சர்வதேச விமான நிலையத்தின் சர்வதேச சிவில் விமான சேவை நிறுவன குறியீட்டு இலக்கம் VCCC ஆவதுடன், சர்வதேச விமான சேவை சங்கத்தின் குறியீட்டு இலக்கம் RML ஆகும். இவ்வாறு பெயர் குறிப்பிடப்பட்டதை தொடர்ந்து இலங்கையில் தற்பொழுது உள்ள சர்வதேச விமான நிலையங்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

இவை கொழும்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், கொழும்பு இரத்மலானை சர்வதேச விமான நிலையம், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையம், மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையம் ஆகியவையே இவையாகும்.

Exit mobile version