பலாலியில் இராணுவச் சிப்பாய் தற்கொலை – இராணுவம், பொலிஸ் இணைந்து விசாரணை

141 Views

யாழ்ப்பாணம், பலாலி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் கடமையாற்றும் இராணுவச் சிப்பாய் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், வத்தேகம பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ரஞ்சுல பண்டார (வயது 36) என்பவரே உயிரிழந்துள்ளார்.

பலாலி பாதுகாப்புப் படைத் தலைமையகத்திலுள்ள விகாரைக்குள்ளேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும்தெரிய வருவதாவது.

குறித்த இராணுவச் சிப்பாய், வெளிநாட்டிலுள்ள பெண் ஒருவருடன் தொடர்பில் இருந்தார் எனவும், அந்தப் பெண், திடீரெனத் தொடர்பைத் துண் டித்தமையால் இத்தகைய முடிவுக்கு அவர் வந்துள்ளார் எனவும் இராணுவத்தினரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் உடலை, பி.சி. ஆர். பரிசோதனைக்குப் பின்னர் உறவினர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply