பயணத் தடை 14 ஆம் திகதி தளர்த்தப்படும் – இராணுவத் தளபதி

நாட்டில் தற்போது அமுலில் உள்ள முழுநேரப் பயணத் தடையை ஜூன் 14ஆம் திகதிக்கு பின்னரும் தொடர்வதற்கு எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

சமூக ஊடங்களில் முழுநேரப் பயணத் தடை எதிர்வரும் 14ஆம் திகதிக்குப் பின்னரும் நீடிக்கப்படும் என வெளியாகி வரும் செய்திகள் தொடர்பில் நேற்று மாலை ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“முழுநேரப் பயணத் தடையை மேலும் நீடிக்கும் தீர்மானம் இதுவரையில் எடுக்கப்படவில்லை. முன்னர் அறிவித்தது போல் எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 4 மணிக்குப் பயண தடை தளர்த்தப்படும்.

பயணத் தடையை நீடிப்பத்து தொடர்பில் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை. அது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் பட்சத்தில் ஊடகங்கள் வாயிலாக அறிவிப்போம்” – என்றார்.

Leave a Reply