பயங்கரவாத தடைச் சட்டத்தை திருத்த தயார் – ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை

174 Views

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்திடம் தெரிவித்துள்ளது.

இலங்கையும் ஐரோப்பிய ஒன்றியமும் தங்கள் கூட்டு ஆணைக்குழுவின் 23 ஆவது சந்திப்பை நேற்று முன்தினம் காணொலி காட்சி வாயிலாகநடத்தின.

இந்தச் சந்திப்பின்போதேஇலங்கை பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதனை சர்வதேசதராதரங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இதற்குப் பதிலளித்துள்ள இலங்கை அரசாங்கத் தரப்பினர், பயங்கரவாதத் தடைச்சட்டத் தில் உரிய மாற்றங்களை மேற்கொள்ள உரிய ஏற்பாடுகளை மீளாய்வுக்கு உட்படுத்த திட்ட மிட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

மேலும் இதன்போது, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை மக்களுக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த விருப்பம் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply