பனை வளம் மீள் உருவாக்கத்திற்கு முயற்சிக்கவேண்டும்- வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளர்

495 Views

‘பனை வளம் காப்பதுடன் மீள் உருவாக்கத்திற்கும் நாம் முயற்சிக்கவேண்டும்’ என யாழ்.வலி கிழக்கில் பனம் விதை நடுகையில் தவிசாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மேலும் தெரிவிக்கையில்,

எமது மக்களின் வாழ்வியலில் பனை வளம், மிக முக்கியமான இடத்தினை வகிக்கின்றது. அவ் வகையில், பனை வளத்தினைக் காக்கும் அதேவேளை மீள் உருவாக்கம் செய்யம் பொறுப்பினை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

1 1 2 பனை வளம் மீள் உருவாக்கத்திற்கு முயற்சிக்கவேண்டும்- வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளர்

மேலும் எமது மக்களின் பொருளாதாரம், கலாச்சாரம், பண்பாடு என சகல மட்டங்களிலும் பனை மரங்கள் முக்கியத்துவமுடையன. கற்பக தருவின் பயன்கள் பற்றி எமது மக்களிடத்தில் விளங்கப்படுத்தப் படவேண்டிய அவசியம் கிடையாது.

எமது கிராமியப் பொருளாதாரத்தில் மிக முக்கிய வளங்களில் ஒன்று. அப்படியான சூழ் நிலையில், காணப்படுகின்ற பனை மரங்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றியும் யுத்தினால் அழிக்கப்பட்ட பனை மரங்களை எவ்வாறு மீளுறுவாக்கம் செய்யப் போகின்றோம் என்பதும் சவாலான காரியமாகவே உள்ளது.

1 4 1 பனை வளம் மீள் உருவாக்கத்திற்கு முயற்சிக்கவேண்டும்- வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளர்

பனைகளை தறிப்பது தொடர்பில் சட்ட ஏற்பாடுகள் இருந்தபோதும் சட்டத்திற்கு முரணாக பனைகளை அழிக்கும் போக்குகள் காணப்படுகின்றன. எங்கள் மண்ணின் மிகச் சிறந்த வளம் அழியக்கூடாது பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காக சட்டத்திற்குப் புறம்பாக பனைகள் அழிக்கப்படும் போது அதற்கு எதிராக சகலரும் வெளிப்படுத்த வேண்டும்.

பனைகள் அருகிவரும் நிலையில் கட்டிட நிர்மாணப் பணிகளுக்கு உலோகங்களையும் மாற்று வளங்களையும் பயன்படுத்துவதும் வரவேற்கத்தக்கது. மேலும் யுத்தத்தின் போது காப்பரண்களை அமைப்பதற்காக ஏராளமான பனைகள் வெட்டி அகற்றப்பட்டுவிட்டன. எரிகணை வீச்சிலும் யுத்த எல்லைகளில் பனைகள் அழிக்கப்பட்டுவிட்டன.

1 5 1 பனை வளம் மீள் உருவாக்கத்திற்கு முயற்சிக்கவேண்டும்- வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளர்

இவ்வாறாக அழிக்கப்பட்ட பனை வளத்தினை மீளுருவாக்கம் செய்வதற்கு பாரிய செயற்றிட்டம் அரசினால் முன்னெடுக்கப்பட்டிருக்கவேண்டும். எனினும் அது பெரியளவில் மேற்கொள்ளப்படவில்லை.

இந் நிலையில் உள்ளுராட்சி மன்றங்களான எமக்கும் பொறுப்புள்ளது. அப் பொறுப்பினை உணர்ந்தே கடந்த அவைக்கூட்டத்தில் முடிவு எடுத்து இச் செயற்றிட்டத்தினை முதற்கட்டமாக வல்லையில் ஆரம்பித்துள்ளோம்.

தொடர்ந்து பாவனையற்று காணப்படும் அரச காணிகளில் இச் செயற்றிட்டம் தொடரும். எதிர்வரும் காலங்களில் இவ்விடயத்துடன் தொடர்புடைய அரச, கூட்டுறவு, அரச சார்பற்ற நிறுவனங்களையும் ஒன்றிணைத்து பயணிக்கவுள்ளோம்”  என்றார்.

Leave a Reply