Tamil News
Home செய்திகள் நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியப் படைவீர்கள் இலங்கையில் – படைத்துறை தலையீட்டுக்கு இந்தியா முயற்சி?

நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியப் படைவீர்கள் இலங்கையில் – படைத்துறை தலையீட்டுக்கு இந்தியா முயற்சி?

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறிலங்கா விஜயத்தையடுத்து, 160 இந்திய படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இரு நாடுகளுக்கிடையிலான கலாசார பரிமாற்றலின் ஓர் அங்கமாக இடம்பெற்றுள்ள இந்த நிகழ்வில், 160 சிறிலங்கா படைவீரர்களின் குடும்பங்களும், அவர்களது குடும்ப அங்கத்தவர்களும் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளனர்.

சிறிலங்காவிற்கான இந்தியத் தூதுவர் மற்றும் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மஹேஸ் சேனநாயக்கவும் இவர்களை வழியனுப்பி வைத்தனர்.

இதனிடையே, சிறீலங்காவுடன் இணைந்து புலனாய்வுக்கட்டமைப்பை உருவாக்கியுள்ள இந்தியா தற்போது தனது படையினரை சிறீலங்காவுக்கு அனுப்பி வருவது மெல்ல மெல்ல ஒரு படைத்துறை ஆக்கிரமிப்பை மேற்கொள்வதற்கான முயற்சி என தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version