நிவர் புயல் – தமிழகத்திற்கு சிவப்பு எச்சரிக்கை

186 Views

நவம்பர் 25ஆம் திகதி சிவப்பு நிற எச்சரிக்கை தமிழகத்திற்கு  விடுக்கப்பட்டுள்ளது.

தெற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்துள்ளதால், நிவர் புயல் வருகிற 25ஆம் திகதி தமிழகத்தை தாக்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

நிவர் (nivar) புயல் தமிழகத்தை தாக்கும் சாத்திய கூறுகள் உள்ளன என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மாமல்லபுரம்- காரைக்கால் இடையே குறைந்த பலத்துடன் கரையை கடக்கும் என்றும்  இதனால், 50 கி.மீட்டரில் இருந்து 75 கி.மீ. வரையில் காற்று வேகமாக வீசக்கூடும் என்றும் கடல் பகுதியில் 62 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்றும் வீசும் என்றும்  எச்சரித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழைக்கும் வாய்ப்பு உள்ளதால், நவம்பர் 25-ம் திகதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும்  எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

அதே நேரம் இலங்கையின் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply