நிலவைச் சுரண்டும் ட்ரம்பின் திட்டம்

அமெரிக்கா நிலவுக்குப் போய் தாதுப் பொருகள்களை சுரங்கம் தோண்டி எடுக்கவேண்டும் என்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.

தொலைதூர விசும்பில் (அதாவது விண்வெளியில்) தாதுப் பொருள்களைத் தேடியெடுத்துப் பயன்படுத்த அமெரிக்காவுக்கு உரிமை உண்டு என்று தெரிவித்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சமீபத்தில் ஒரு நிர்வாக ஆணை பிறப்பித்தார்.

விண்வெளியினை வளங்களைப் பெறுவதற்கான பொதுப் பரப்பாக அமெரிக்கா பார்க்கவில்லை என்றும், எனவே விண்வெளியில் தாதுப் பொருள்களை சுரங்கம் தோண்டி எடுக்க சர்வதேச ஒப்பந்தங்களின் அனுமதி தேவையில்லை என்றும் அந்த ஆணை தெரிவிக்கிறது.

ஆனால் எதற்காக விண்வெளியில் சுரங்கம் தோண்ட விரும்புகிறார் டிரம்ப்? அதனால் என்ன பலன் கிடைக்கும்?

ரேடியோ1 நியூஸ்பீட் சார்பில் சில வல்லுநர்களிடம் இது குறித்துப் பேசினோம்.

‘உயிர்வாழ்வை புவியைக் கடந்து கொண்டு செல்லுதல்’

நிலவில் சுரங்கம் தோண்டி தாதுப் பொருகள்களை எடுப்பது, மனிதர்கள் விண்வெளியில், செவ்வாய் போன்ற இடங்களை நோக்கி மேலதிக தூரம் பயணம் செல்வதற்கு உதவியாக இருக்கும் என்கிறார் சாரா குருடாஸ். இவர் ஒரு விண்வெளித்துறை இதழியலாளர். பால்வழிப் பயணத்துக்கான பெட்ரோல் நிலையமாக நிலவு ஆகும் வாய்ப்பிருக்கிறது என்கிறார் இவர். ஏனெனில் நிலவில் ராக்கெட் எரிபொருளுக்குத் தேவையான ஹைட்ரஜன், ஆக்சிஜன் முதலியவை நிலவில் கிடைக்கும் என்கிறார் சாரா.

விண்வெளியில் ஒரு பெட்ரோல் நிலையம் இருந்தால், எரிபொருள் தீர்ந்துவிடும் என்று கவலை இன்றி, மேலதிக தூரம் பயணிக்க முடியும் என்பது இவர் கூற்று. புவிக்குப் பயன்தரக்கூடிய ஏராளமான வளங்கள் விண்வெளியில் இருப்பதால், அதைத் தேடுவது முக்கியம் என்கிறார் அவர்.

பருவநிலை மாற்றத்தை கருத்தில்கொண்டு உலகமே புதுப்பிக்கவல்ல ஆற்றல் மூலங்களை நோக்கி நகர்கிறது. எனவே இத்தகைய விண் வளங்கள் தேவை என்கிறார் பேராசிரியர் பெஞ்சமின் சொவாகூல்.111723634 trumponthemoon976 நிலவைச் சுரண்டும் ட்ரம்பின் திட்டம்

இவர் சஸ்ஸெக்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆற்றல் கொள்கை தொடர்பான பேராசிரியராக இருக்கிறார். விண்வெளியில் தாதுப்பொருள்களை தோண்டி எடுத்தால் அது மின்சார கார் போன்ற சாதனங்களைத் தயாரிக்க உதவியாக இருக்கும். இது நீண்டகால நோக்கில் சுற்றுச்சூழலுக்கு நல்லதாக இருக்கும் என்கிறார் அவர்.

அவசியமானதாக இருக்கிற லித்தியம், கோபால்ட் போன்ற தாதுக்கள் சீனா, ரஷ்யா, காங்கோ போன்ற இடங்களில் முக்கியமாக கிடைக்கின்றன. அவற்றைப் பெறுவது மிக கடினமானது. உலகெங்கும் உள்ள பல்வேறு சப்ளையர்களிடம் இருந்து இத்தகைய தாதுக்களைப் பெறுவது சிக்கலானது. ஏனெனில் ஒவ்வோர் இடத்துக்கும் ஒரு சட்டம், விதிமுறை உள்ளது. இந்த வகையில் பார்த்தால் நிலவில் சுரங்கம் தோண்டி இவற்றைப் பெறுவதுதான் சிக்கல் இல்லாதது என்கிறார் பெஞ்சமின்.

காங்கோ போன்ற இடங்களில் இத்தகைய பொருள்களை சுரங்கம் தோண்டி எடுக்கும்பணி பயங்கரமான சூழ்நிலைகளில் நடக்கிறது.

ஆனால் நிலவில் சுரங்கம் தோண்டுவது என்ற திட்டம், குறுகிய காலத்தில் புவியில் பருவநிலை மாற்றத்துக்குத் தீர்வு ஏதும் தராது என்றும் எச்சரிக்கிறார் பெஞ்சமின்.

அமெரிக்க – சீன நெருக்கடி

உலகின் பிற பகுதிகளோடு ஒப்பிடுகையில் தாதுக்களைப் பெறுவதற்கான வாய்ப்பு அமெரிக்காவுக்கு குறைவாக இருப்பதே நிலவில் சுரங்கம் தோண்டவேண்டும் என்ற அமெரிக்க அதிபர் டிரம்பின் திட்டத்தின் பின்னணி காரணமாக இருக்கலாம்.

தாதுக்களைப் பெறுவதற்கான பந்தயத்தில் அமெரிக்கா தோற்றுவிட்டது. சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் முந்திச் செல்கின்றன என்கிறார் பெஞ்சமின். சீனா தோண்டி எடுக்கும் தாதுக்கள் உலகம் முழுவதும் கிடைக்கின்றன.

சீனர்கள் இல்லாத இடத்தில் உலோகங்களைப் பெற முடியுமானால் அது அதிபர் டிரம்ப் போன்ற ஆட்களை உண்மையில் கவரும். அத்தகைய ஓர் இடம்தான் விண்வெளி என்று கூறுகிறார் பெஞ்சமின்.

டிரம்ப் அதிபரானதில் இருந்து சீனாவுக்கும் – அமெரிக்காவுக்கும் இடையே பதற்றம் இருந்து வருகிறது. இந்நிலையில், நிலவில் சுரங்கம் தோண்டுவது போன்ற திட்டம் தனது ஆதிக்கத்தையும், தலைமைத்துவத்தையும் நிலைநாட்டிக் கொள்ள டிரம்ப்புக்கு கிடைத்த வாய்ப்பு என்கிறார் இவர்.

சட்டம் என்ன சொல்கிறது?

விண்வெளியில் அமெரிக்க முயற்சிகளை சர்வதேச சட்டங்கள் கட்டுப்படுத்தாது என்று டிரம்ப் பிறப்பித்த ஆணை திட்டவட்டமாக கூறுகிறது. ஆனால், புவிக்கு வெளியே மனிதர்கள் என்னவெல்லாம் செய்யலாம் என்பதைப் பற்றிய சட்டங்கள் அவ்வளவு திட்டவட்டமாக வரையறுக்கப்படவில்லை.

விண்வெளி சட்டங்கள் என்பது வளர்ந்து வருகிறது. காலப்போக்கில் இதில் மாற்றங்கள் வரும் என்கிறார் சாரா.

எந்த ஒரு நாடும் நிலவுக்கு சொந்தம் கொண்டாட முடியாது. ஆனால் இது கடல்வழிச் சட்டம் போன்றது. நீங்கள் முதலில் சென்று, கண்டுபிடித்து, சுரங்கம் தோண்டினால், அதற்கு நீங்கள் உரிமையாளர் அவ்வளவே.

புவியில் பருவநிலை மாற்றம் நிகழ்ந்துகொண்டிருப்பதால் தொலைதூர விண்வெளியில் நம் பார்வையைப் பதிப்பது தவிர்க்கமுடியாதது என்கிறார் பெஞ்சமின். “இப்படியே போனால் புவியைக் குட்டிச்சுவராக்கிவிடுவோம் என்பதால், நமக்குப் போவதற்கு உள்ள ஒரே இடம் விண்வெளிதான் என்று சிலர் வாதிடுகின்றனர். விண்வெளியில் வளங்களைத் தேடுவது மட்டுமே மனித குலத்துக்கு உள்ள ஒரே மாற்றுவழி என்பது இந்தப் பார்வை உள்ளவர்களின் கூற்று” என்கிறார் அவர்.

நம் வாழ்நாளிலேயே இது நடக்குமா?

“இதற்கான தொழில்நுட்பம் உள்ளது. அது வேகமாகவும் வளர்ந்துவருகிறது. ஏனெனில், தனியார் நிறுவனங்களும் இதில் ஈடுபட்டுள்ளன என்கிறார் சாரா. முன்பெல்லாம் அரசாங்கம் மட்டுமே இது போன்ற திட்டங்களுக்கு நிதியளித்து செயல்படுத்தும். ஆனால், தனியார் நிறுவனங்கள், தனி நபர்கள் தற்போது ஈடுபாடு காட்டுவதால், நிறைய நிதியும், உத்வேகமும் கிடைத்துள்ளது என்று கூறுகிறார் அவர்.

vNShmJHXMyHUQqapyexJtU 1 நிலவைச் சுரண்டும் ட்ரம்பின் திட்டம்

நிலவில், விண் கற்களில், கடலில் சுரங்கம் தோண்டுவது, மனிதர்கள் செவ்வாய்க்குப் போவது போன்ற விவகாரங்களில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படுவதை நாம் பார்க்கப்போகிறோம். நம் வாழ்நாளிலேயே இவையெல்லாம் சாத்தியமாகும்” என்பது சாராவின் கூற்று. ஆனால், ஏற்கெனவே புவியில் உள்ள சுரங்கத் திட்டங்களில் தொழில்நுட்ப மேம்பாட்டைப் பயன்படுத்துவதும் முக்கியம் என்கிறார் பெஞ்சமின்.

நிலவில் சுரங்கம் தோண்டுவது என்பது கடினமானது, அது கடைசி வாய்ப்பாகத்தான் இருக்கும் என்கிறார் அவர். “எனவே, வாயு, நீரடி சுரங்கம் போன்ற ஏற்கெனவே இருக்கும் சுரங்கங்களை முதலில் மேம்படுத்துங்கள். பிறகு அடுத்தக் கட்டத்துக்குப் போகலாம்” என்பது அவரது வாதம்.

நிலவில் சுரங்கம் தோண்டுவது போன்றவை நடக்க குறைந்தது 10-15 ஆண்டுகள் ஆகும் என்று கூறும் அவர் அதன்பிறகும்கூட இத்திட்டத்தின் எதிர்காலம், பணம், வளங்கள் போன்ற பல காரணிகளைப் பொறுத்தே அமையும் என்கிறார் பெஞ்சமின்.

ஆனால், இதனிலும் பெரிய விஷயத்தின் அங்கமே இதெல்லாம் என்கிறார் சாரா. “நீங்கள் நிலவைப் பார்க்கிறீர்கள். நாங்கள் வானத்தைப் பார்க்கிறோம். மனித குலத்தை புவியைத் தாண்டியும் கொண்டு செல்வதற்கான திட்டத்தின் ஒரு பகுதியே இது” என்பது சாராவின் கூற்று.

தகவல் – பிபிசி