Home செய்திகள் நினைவேந்தலின் கூட்டு அரசியலை நாங்கள் வெளிப்படையாக இந்த உலகத்துக்கு தெளிவுபடுத்த வேண்டும்

நினைவேந்தலின் கூட்டு அரசியலை நாங்கள் வெளிப்படையாக இந்த உலகத்துக்கு தெளிவுபடுத்த வேண்டும்

மாவீரர்கள் ஒரு உன்னத இலட்சியத்துக்காக விதையானவர்கள் . ஒவ்வொரு உயிரினங்களுக்கும் மரணம் என்பது நிச்சயிக்கப்பட்டது ஆனால் அந்த மரணத்தை மானிடவிடுதலைக்காக தங்களை அர்ப்பணித்து ஒப்பற்ற தியாகத்தை செய்து  வென்றவர்கள் மாவீரர்கள் .

மாவீரர் நாள் ஒவ்வொரு வருடமும் நினைவேந்தப்பட்டு வருகிறது . ஆனால் வெறுமனவே அதை ஒரு நினைவேந்தலாக மட்டும் கடந்துவிடுகிறோம். அந்த நினைவேந்தலின் கூட்டு அரசியலை நாங்கள் வெளிப்படையாக இந்த உலகத்துக்கு தெளிவுபடுத்த வேண்டும். எமது இனம் அடக்குமுறைகளிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்ற உன்னத நோக்கத்துக்காக மடித்தவர்களே மாவீரர்கள் ஆனால் அவர்களது இலட்சியம் இன்னும் அடையப்படவில்லை எமது இனத்தின் மீதான அடக்குமுறை இன அழிப்பு தொடர்ந்து வபிருகிறது.

maveerar நினைவேந்தலின் கூட்டு அரசியலை நாங்கள் வெளிப்படையாக இந்த உலகத்துக்கு தெளிவுபடுத்த வேண்டும்ஆகவே நீதிக்காகவும் விசுதலைக்காகவும் போராடும் இனமாக நாங்கள் மாவீரர்களை எமது விடுதலைக்காக போராடியவர்கள் என்ற உண்மையை உலகின் முன் வெளிப்படுத்தவேண்டும் . அவர்களது சாவு வெறும் சாவு அல்ல அது ஒரு இனத்தின் விடுதலை வேட்கை என்பதை தெளிவு படுத்தி நாம் செயலாற்ற வேண்டும்.

மேலும் ஒவ்வொரு வருடமும் மாவீரர் நாளினை பெருமெடுப்பில் செய்யும் நாம் அதனை அந்த நாளோடு கடந்து விட்டு வேறு வேலைகளுக்கு சென்று விடுகிறோம் ஆனால் அந்த மாவீரரின் பெற்றோர் உரித்துடையோர் அவர்தம் குடும்பங்கள் படும் துன்பங்களை போக்க ஒரு பொறிமுறையை முன்னெடுக்க வேண்டும் . வெறுமனவே உதிரி உதிரியாக உதவிகளை வழங்குவதற்கு மாறாக அவர்களின் நிலையான வாழ்வுக்கு ஏற்ற திட்டங்களை முன்னெடுக்க முதலில் நாம் ஒற்றுமை படவேண்டும் கூட்டு  முன்னெடுப்பை மேற்கொள்ளவேண்டும். இது எங்கள் முன் இருக்கின்ற அவசியமானதும் மகத்தானதுமான பணி.

குமணன் கணபதிப்பிள்ளை – முல்லைத்தீவு

Exit mobile version