ஜனாதிபதி அநுர குமரதிசாநாயக்க அரசின் 2025 ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களுக்கான கணக்கு வாக்குப்பதிவு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
2025 ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களுக்கான கணக்கு வாக்குப்பதிவு வியாழக்கிழமை சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்னாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இருதினங்கள் இதன் மீதான விவாதம் இடம்பெற்றது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை விவாத முடிவில் எதிர்க்கட்சிகள் கணக்கு வாக்குப்பதிவு மீது வாக்கெடுப்பை கோராத காரணத்தால் அது ஏக மனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அஷோக்க ரன்வல சபைக்கு அறிவித்தார்.
அதன் பிரகாரம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசின் 2025 ஜனவரி 1 ஆம் திகதியிலிருந்து 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் திகதி வரையான 4 மாத காலப் பகுதிக்கான கணக்கு வாக்குப்பதிவாக 9,60,500 கோடி ரூபாவுக்கு பாராளுமன்றத்தின் அனுமதி கிடைக்கப்பெற்றது.