நாளைய தினம் சர்வதே சித்திரவதைகள் நாள்- இலங்கையில் சமூக ஆர்வலர் ஒருவர் இன்று கடத்தல்

234 Views

நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவரும் சமூக ஆர்வலருமான அசேல சம்பத் , அடையாளம் தெரியாத 20 நபர்களால் இன்று இரவு 8.30 மணியளவில் வெள்ளை வானில்  (NE 0833) கடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் சர்வதே சித்திரவதைகள் நாள் நினைவு கூரப்படவுள்ள நிலையில், தனது தந்தை கடத்தப்பட்டுள்ளதாக அவரது மகள் Agra Dinithiri ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

தற்போதைய கோட்டாபய அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக போராட்டங்களை ஒருங்கிணைப்பதில் முன்னின்று அசேல சம்பத் செயற்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply