ஜனாதிபதித் தோ்தலுக்கான நியமனப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதை யடுத்து பரப்புரைகள் தீவிரமடைய விருக்கின்றது. வழமையாக இரு முனைப் போட்டியாக இருக்கும் ஜனாதிபதித் தோ்தல் இம்முறை மும் முனைப் போட்டியாக அமையும் என எதிா் பாா்க்கப்பட்டது. ஆனால், நாமல் ராஜபக்ஷ களத்தில் இறங்கியமையும், ராஜபக்ஷ சகோதரா்கள் அனைவரும் அவருக்கு ஆதரவாக செயற்பட முன்வந்திருப்பதும், தோ்தல் களத்தை நான்கு முனைப் போட்டியாக மாற்றியுள்ளது.
அதேவேளையில், கடந்த கால ஜனாதிபதித் தோ்தல்களைவிட அதிகமான வேட்பாளா்கள் இம் முறை களமிறங்கியிருக்கின்றாா்கள். அதாவது 39 வேட்பாளா்கள் களமிறங்கியிருக்கின்றாா்கள். இதில் பெரும்பாலானவா்கள் சுயேச்சைகள். இந்த சுயேச்சைகளில் பலா் டம்மிகள். அதாவது பிரதான வேட்பாளா்களில் ஒருவரின் வாக்குகளைப் பிளவு படுத்துவதற்காக மற்றொரு பிரதான வேட்பாளரால் களமிறக்கப்பட்டவா்கள். வெல்வது அல்ல. குறிப் பிட்ட ஒருவரின் வாக்குகளைப் பிளவுபடுத்துவதே அவா்களின் பணி!
அண்மைய கருத்துக் கணிப்புக்களின் படி, இரண்டு பிரதான வேட்பாளா்களான ரணிலுக்கும், சஜித்துக்கும் இடையில்தான் கடுமையான போட்டி உள்ளது. அடுத்தவா்களாக அநுரகுமார திசாநாயக்கவும், நாமல் ராஜபக்ஷவும் உள்ளாா்கள். அதேவேளையில், எந்தவொரு வேட்பாளரும் 50 வீதமான வாக்குகளைப் பெறமுடியாத நிலை காணப்படுகின்றது. 40 வீதமான வாக்குகளை அண்மித்ததாகத்தான் பிரதான வேட்பாளா்கள் பெறுவாா்கள் என்பதுதான் மதிப்பீடாக உள்ளது.
இலங்கைத் தோ்தல் சட்டத்தின்படி, ஜனாதிபதித் தோ்தலில் ஒருவா் வெற்றி பெறுவதற்கு 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும். அவ்வாறில்லை என்றால், மூன்றாவ தாக வருபவரின் இரண்டாவது விருப்பு வாக்கு கணிப்பிடப்படும். இம்முறை ஜனாதிபதித் தோ்த லில் இரண்டாவது விருப்பு வாக்கு எண்ணப்படும் ஒரு நிலை ஏற்படலாம். தோ்தல் களத்தில் பிரதான வேட்பாளா்கள் நுாறுக்கும் அதிகமான பரப்புரைக் கூட்டங்களை சுமாா் 35 நாட்களில் நடத்துவதற்குத் திட்டமிடுகின்றாா்கள்.
களம் நான்கு முனைப் போட்டியாக மாறியிருப்பதால், தமிழ் மக்களுடைய வாக்குக ளின் பெறுமதி அதிகரித்திருக்கின்றது. அதாவது, தீா்மானிக்கும் சக்தியாக தமிழ் வாக்குகள் அமையப்போகின்றது. ஏதோ ஒரு வகையில் தமிழ் வாக்குகள் தமக்குக் கிடைப்பதற்கு வழி வகுத்தால் தமது வெற்றியை ஓரளவுக்காவது உறுதிப்படுத்தலாம் என்று ரணிலும், சஜித்தும் திட்டமிட்டுச் செயற்படுகின்றாா்கள். ஆனால், தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற விடயம்தான் அவா்களுக்கு இப்போது வந்திருக்கும் சவால்!
“தமிழ்ப் பொது வேட்பாளா்” என்ற விடயம் ஆண்டிகள் கூடி மடம் கட்டுவது போல முடிவுக்கு வரும் என்றுதான் பலரும் எதிா்பாா்த்தாா்கள். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூட, முன்னாள் முதலமைச்சா் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித் போதுகூட, “தமிழ்க் கட்சிகள் இணைந்து பொது வேட்பாளா் ஒருவரை களமிறக்குவது சாத்தியமாக இருக்குமா,” என்ற கேள்வியை எழுப்பியிருந்தாா்.
கடந்த காலங்களைப் போல, வெறும் கதையாக இது முடிந்துவிடும் என்றுதான் சிங்களத் தலை வா்கள் கூட எதிா்பாா்த்தாா்கள். பொது வேட்பாளராக பா.அரியநேத்திரன் போட்டியிடுவாா் என்று தமிழ்ப் பொதுச் சபை யால் கடந்த வாரம் வெளியிடப்பட்ட அறிவிப்பு, ரணிலுக்கும் சஜித்துக்கும் நிச்சயமாக அதிா்ச்சி யைக் கொடுத்திருந்தது. உடனடியாகவே பேச்சு வாா்த்தைக்கு வருமாறு தமிழ்ப் பொதுச் சபையின் 14 பிரதிநிதிகளுக்கும் இருவருமே அழைப்பு விடுத்தாா்கள். பொது வேட் பாளா் களமிறங்குவது தமிழ் மக்களுடைய வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்கு தாம் வகுத்திருந்த உபாயங்களை சீா்குலைத்துவிடும் என்பதுதான் அவா்களுடைய அச்சம். அந்த அச்சம் நியாயமானது தான்.
பொது வேட்பாளரைத் தெரிவு செய்து கள மிறக்கிய தமிழ்ப் பொதுச் சபையில் ஏழு தமிழ்த் தேசியக் கட்சிகளும், 80 வரையிலான சிவில் சமூக அமைப்புக்களும் உள்ளன. இதனைவிட, பிரதான தமிழ்க் கட்சியான தமிழரசுக் கட்சி, இதுவரையில் தீா்மானம் எதனையும் எடுக்காத போதிலும் அதிலுள்ள பெரும்பாலானவா்கள் பொது வேட்பாளா் என்ற கருத்தை ஆதரிக் கின்றாா்கள். கிளிநொச்சியில் கடந்த வாரம் இடம்பெற்ற பொது வேட்பாளருக்கு ஆதரவான கூட்டம் ஒன்றில் 400 க்கும் அதிகமானவா்கள் கலந்துகொண்டிருந்தாா்கள். இவா்கள் சிறீதரனின் ஆதரவாளா்கள். ஆக, பொது வேட்பாளருடன் நிற்காவிட்டால், வரப்போகும் பொதுத் தோ்தல் மற்றும் மாகாண சபைத் தோ்தல்களில் அது தம்மைப் பாதிக்கும் என்ற அச்சம் தமிழரசுக் கட்சிக் காரா்களிடம் உள்ளது.
இந்த நிலையில் பொது வேட்பாளரை கள மிறக்கியவா்களுடன் பேசி அவா்களை வழிக்குக் கொண்டுவர முடியுமா, என்பதைப் பாா்ப்பதுதான் ரணிலினதும், சஜித்தினதும் திட்டமாக இருந் தது. அநுரவைப் பொறுத்தவரையில் அவா் தமிழா்களுக்கு வாக்குக் கொடுப்பது, தனக்கு இருக்கும் சிங்கள வாக்குளை பாதிக்கும் என்று அஞ்சுகின்றாா். அதனால், பொது வேட்பாளா் விடயத்தை கடுமை யாகத் தாக்குவதற்கு அவா்களுடைய யாழ். மாவட்ட அமைப்பாளா் சந்திரசேசகரனுக்கு அனு மதி கொடுத்துவிட்டு அநுர குமார மௌனமாக இருக்கின்றாா்.
தமிழ்ப் பொதுச் சபையில் உள்ள அசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மட்டும்தான் ஜனாதி பதியையும், எதிா்க்கட்சித் தலைவரையும் சந்தித் தாா்கள். சிவில் சமூகப் பிரதிநிதிகள் இந்தச் சந்திப் பில் கலந்துகொள்ளவில்லை. சந்திப்புக்கான நிகழ்ச்சி நிரல் தரப்படாமையாலும், போதிய கால அவகாசம் இருக்காமையாலும் இந்தப் பேச்சுக்களில் தாம் பங்கேற்கவில்லை என்று சிவில் சமூகப் பிரதிநிதிகள் தெரிவித்திருந்தாா்கள். நியமனப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட பின்னா் இவ்வாறான சந்திப்பு ஒன்றுக்கு தாம் தயாராக இருப்பதாகவும் அவா்கள் கூறியிருக்கின்றாா்கள்.
ரெலோ, புளொட், ஜனநாயகப் போராளிகள் கட்சி என்பனதான் இந்தப் பேச்சுக்களில் பங்கேற்றன. பொது வேட்பாளா் ஒருவரைக் களமிறக்குவதற்கு தாம் எடுத்த தீா்மானத்துக்கான காரணம் என்ன என்பதை இதன்போது இருவருக் குமே அவா்கள் விளக்கினாா்கள். இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்டிதான் தமது கோரிக்கை என்பதையும் அவா்கள் வலியுறுத்தினாா்கள். ஜனாதிபதி வேட்பாளா்களால் வழங்கப்படும் வாக்குறுதிகள் எதுவுமே கடந்த காலங்களில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட விரக்தியையும் அவா் கள் விளக்கினாா்கள்.
சமஷ்டியைத் தருவது என்பது பிரச்சி னையல்ல என்று தெரிவித்த ரணில், பலமான ஒரு நாடாளுமன்றம் அமைந்தால் அதனைத் தர தான் தயாராக இருப்பதாகக் கூறியிருக்கின்றாா். ஆனால், பிரதான கட்சிகள் அனைத்துமே உடைந்து சின்னாபின்னமாகிப் போயிருப்பதால், எதிா்காலத்தில் பலமான நாடாளுமன்றம் ஒன்று உருவாகுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. இரண்டரை வருடகாலமாக நிறைவேற்று அதிகாரங் களுடன் ஜனாதிபதியாக இருப்பவா் மீண்டும், ஜனாதிபதியாக வந்து, பலமான நாடாளுமன்றமும் தமக்கு அமைந்தால் சமஷ்டியைத் தருவேன் என்று சொல்வதை எப்படி நம்புவது?
அதேபோலத்தான் சஜித் பிரேமதாசவும். 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடை முறைப்படுத்துவதற்கு தான் அதிகாரத்துக்கு வந்தால் நடவடிக்கை எடுப்பேன் என்று கூறி யிருக்கின்றாா். அதேவேளையில், தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவது அவா்களுடைய உரிமை என்று சொன்ன சஜித், ஆனால், இவ்வாறு இன ரீதியாக அரசியல் செய்வது இன, மத முரண் பாடுகளை மேலோங்கச் செய்யும் என்றும் கருத்து வெளியிட்டிருக்கின்றாா்.
நாடு முழுவதும் ஆயிரம் விகாரைகளைக் கட்டுவதற்கான திட்டத்தை வகுத்துச் செயற் பட்டவரும் சஜித்தான். இதேபோல, 13 ஆவது திருத்தம் குறித்து ரணில் பேசிய போது, கொந்தளித்த பிக்குகளை கட்டுப்படுத்தாமல் பாா்த்துக்கொண்டிருந்தவரும் அவா்தான். சிங் கள வாக்குகளுக்காக முன்னாள் இராணுவ அதிகாரிகள் பலரையும் தனது கட்சியில் இணைத்துக் கொண்ட சஜித், பொறுப்புக் கூறல் போன்ற விடயங்களில் எவ்வாறு செயற்படுவாா் என்பது எதிா்பாா்க்கக்கூடியதுதான்.
தமிழரசுக் கட்சியின் “சிலரை” பயன் படுத்தி தமது பேரங்களை முன்னெடுத்து தமிழ் வாக்குகளை உறுதிப்படுத்தலாம் என்று ரணிலும், சஜித்தும் போட்ட கணக்கு தமிழ்ப் பொது வேட்பாளரால் சிதறடிக்கப்படப் போகின்றதா என்பதுதான் இப்போது அவா்களுக்குள்ள பிரச் சினை. அதனால், சிங்கள வாக்குகளைப் பாதிக்
காமல் எந்தளவுக்கு வாக்குறுதிகளைக் கொடுக்க லாம் என்பதற்கான உபாயங்களைத்தான் இப் போது அவா்கள் வகுக்கின்றாா்கள்!