நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பயணித்த வாகனம் விபத்து

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் வாகனம் விபத்திற்குள்ளாகியுள்ளது எனினும் அவருக்கு எந்த பாதிப்பு இல்லை என்று  தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் சுமந்திரன் பயணித்த வாகனம்  முழுமையாக சேதமடைந்துள்ளது.

மழை பெய்து கொண்டிருந்த நிலையில், அதிவேக நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது  இந்த விபத்து ஏற்பட்டதாகவும் பின்னர் மாற்று வாகனம் ஒன்றில் கல்முனை நோக்கி சுமந்திரன் பயணம்  செய்தார் எனவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில், பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில் பங்கேற்றமைக்காக அவருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்காக, கல்முனை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகும் பொருட்டு அங்கு செல்லும் வழியிலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.