அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்ற மறுநாளே நாடாளு மன்றம் கலைக்கப்பட்டது.
இந்த நிலையில், வரும் நவம்பர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதன்படி, வேட்புமனு தாக்கல் ஒக்டோபர் 4-ஆம் திகதி தொடங்கி ஒக்டோபர் 11-ஆம் திகதி வரை நடைபெறும். வாக்குப்பதிவு நவம்பர் 14-ஆம் திகதி நடத்தப்படும். தேர்தலுக்குப் பின் புதிய நாடாளுமன்றம் நவம்பர் 21-ஆம் திகதி கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 225. இவர்களில் 196 மக்கள் பிரதிநிதிகள் மக்கள் ஆணை ஊடாகவும், 29 பிரதிநிதிகள் தேசிய பட்டியல் ஊடாகவும் தெரிவு செய்யப்படுவது வழக்கம். ஆட்சியிலு ள்ள கட்சியொன்று ஆகக் குறைந்தது 113 உறுப்பினர் களைத் தன்வசப்படுத்த வேண்டும்.
நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்குப் பெரும்பான்மை ஆசனங்களை வெற்றி கொள்ள முடியுமா என்ற கேள்விக்கு மத்தியில்,தமிழ் மற்றும் சிறுபான்மை இன கட்சிகளின் அதிகரிப்பும் முரண்பாடுகளாலும் நாடாளு மன்றத் தேர்தலில் பிரதிநிதித்துவத்தை வடக்கு கிழக்கில் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இம் முறை மக்கள் வாக்களிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்களா என்ற சந்தேகமும் எழுகின்றது.
இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் மக்கள் அதிகமாக வாக்களிக்க வேண்டும் என்பதற்காக 18+ என்ற இளைஞர் யுவதிகளுக்கான வாக்களிக்கும் விழிப்புணர்வுகளை பல மாவ ட்டங்களில் நடாத்தி வருகின்றனர். இதற்காக அரச சார்பற்ற நிறுவனங்கள் செயற்படுவதையும் காண முடிகிறது. இந்த நிலையில் இந்த நாடாளுமன்ற தேர்தல் குறித்து மக்கள் சிலரின் கருத்துக்கள்…..
துரைசாமி நடராஜா,பத்திரிகையாளர்
இலங்கையின் பாராளுமன்ற தேர்தல் நவம்பர் மாதம் 14 ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் இத்தேர்தலில் உச்சகட்ட ஆசனங்களை பெற்றுக் கொள்ளும் நோக்கில் பல்வேறு காய் நகர்த்தல்க ளையும் மேற்கொண்டு வருகின்றன.
இலங்கையின் ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க அண்மையில் தெரிவு செய்யப்பட்ட நிலையில் இத்தேர்தல் அக்கட்சியினருக்கு மிகப்பெரும் வாய்ப்பாக உள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தேசிய மக்கள் சக்தியின் கை ஓங்கியுள்ள நிலையில் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் இக் கட்சி குறைந்தது 135 ஆசனங்களை கைப்பற்றும் முயற்சியில் பிரசார நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.
இலங்கையின் பாராளுமன்றத்தில் விகிதா சார பிரதிநிதித்துவ தேர்தல் முறைக்கமைய 225 ஆசனங்கள் காணப்படுகின்றமையும் குறிப்பிடத் தக்கதாகும்.இந்நிலையில் சமகால தேசிய மக்கள் சக்தியின் அலையினை கருத்தில் கொண்டு நோக்குகையில் இக்கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் 150 க்கும் மேற்பட்ட ஆசனங்களை கைப்பற்றிக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்பது அரசியல் அவதானிகளின் கருத்தாக உள்ளது.
மறுபுறத்தில் மூன்றில் இரண்டு என்ற பெரும்பான்மையை தேசிய மக்கள் சக்தி பெற்றுக் கொள்ளுமிடத்து அது எதிர்கட்சிகளின் பலத்தை இழக்கச் செய்துவிடும்.ஜனநாயக மரபிற்கு இது உகந்ததல்ல.எனவே எதிர்க்கட்சிகளின் ஆதிக் கத்தை நிலைநிறுத்தும் வகையில் செயற்பாடுகள் இடம்பெற வேண்டும் என்பதும் ஒரு சிலரின் கருத்தாகவுள்ளது.
இது ஒரு புறமிருக்க வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட சிறுபான்மை கட்சிகள் இப்போது தங்களுக்குள் முரண்பட்டுக் கொண்டு ‘குடுமிச்சண்டை’ பிடித்துக் கொண்டிருக்கின்றன.இதனால் இக்கட்சிகளின் பாராளுமன்ற பிரதி நிதித்துவ வீழ்ச்சி ஏற்படக்கூடிய அபாயநிலை காணப்படுகின்றது.இது இக்கட்சிகளையும் சிறுபான்மை சமூகத்தையும் பொறுத்தவரையில் பாரிய தாக்க விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடியதாகவே அமையும் என்பதையும் மறுப்பதற் கில்லை. சிறுபான்மை கட்சிகள் தலைமைத்துவ ஆசை மற்றும் பிரதிநிதித்துவ ஆசை எனப்பலவற்றையும் மையப்படுத்தி பிரிந்து செயற் படுவதிலேயே ஆர்வம் கொண்டுள்ளன. இது பெரும்பான்மை கட்சிகளுக்கு வாய்ப்பாக போய் விடுகின்றது.இம்முறை பாராளுமன்ற தேர்தலில் சிறுபான்மை கட்சிகள் பாரிய வீழ்ச்சியினை சந்திக்கப் போகின்றன.இந்நிலையில் இதன் பின்னராவது இக்கட்சிகள் ஐக்கியத்துடன் செயற் படுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டி யுள்ளது.
இதேவேளை தேசிய மக்கள் சக்தி சிறு பான்மை மக்கள் தம்முடனான தொடர்புகளை நேரடியாக பேண வேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளது.இதனால் சிறுபான்மை கட்சிகளின் நிலைமை மேலும் கேள்விக்குறியாகி உள்ளது என்பதே உண்மையாகும்.’
கே.கோகிலா,சமூக சிவில் செயற்பாட்டாளர்
இலங்கையில் தமிழ் மக்களைப் பொறுத்த மட்டில் வாக்களித்து வாக்களித்து அழுத்து போய் விட்டார்கள். நாங்கள் நல்லதொரு பாராளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்ய வேண்டும். எங்களுக்காக குரல் கொடுக்க கூடிய ஒருவரை பாராளுமன்றம் அனுப்ப வேண்டும். ஊழல் அற்ற சமூக சிந்தனை கொண்ட ஒருவரையை பாராளுமன்றம் அனுப்ப வேண்டும். அப்போது தான் ஊரும் சமூகமும் பலமடையும்’ என்றார்.
தென்கையிலை ஆதீனம் சுவாமி தவத்திரு அகத்தியர் அடிகளார்
திருகோணமலையை பொறுத்தமட்டில் அதிகளவான வேட்பாளர்கள் இம்முறை போட்டி யிடுகிறார்கள் இது எவ்வளவு தூரம் சாத்தியமானது என்று தெரியவில்லை. இருந்த போதிலும் தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் கட்சிகளின் பிளவுகளால் இது ஆரோக்கியமான விடயமல்ல தமிழ் தேசியம் இதன் மூலம் பாதுகாக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட வேண்டும்’ என்றார்.
ராஜன்,சமூக சிவில் அமைப்பின் ஒன்றிய தலைவர்
எமக்கான பிரதிநிதியை கடந்த காலங்க ளில் தெரிவு செய்து அவர்கள் அவர்களாகவே சுயமாகவும் தங்களுக்கு சொந்தமான வர்களுக்கு வேலை வாய்ப்பும் சொந்த ஊருக் குத் தேவையானவற்றை நிவர்த்தி செய்தார்கள். ஏமாற்றுக்காரர்கள் இவர்கள் பொய் வாக்குறுதி களை தேர்தல் மேடைகளில் அள்ளி வீசுவார்கள். வெற்றி பெற்றதும் சொகுசு வாகனங்களில் மாடி வீட்டிலும் பங்களாவிலும் வாழ்வார்கள். மக்களாகிய நாங்கள் வாடித்தான் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
வா.ரன்ஞனி,பெண் சமூக உரிமை செயற்பாட்டாளர்
மக்களுடைய ஒரு ஜனநாயக உரிமையாக தேர்தல் வாக்களிப்பு காணப்படுகின்றது தமிழ் கட்சிகளின் பல பிரிவுகளால் அதிகளவான அபேட்சகர்கள் வடகிழக்கு உட்பட ஏனைய மாவட்டங்களில் களமிறங்கியுள்ளனர்.
இதனால் வாக்குகள் சிதறடிக்கப்படலாம் எனவே தான் தமிழ் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் திருகோணமலை மட்டக்களப்பு மாவட்டங்களில் தமிழ் மக்களுடைய பிரதிநிதித் துவம் பாதுகாக்கப்பட வேண்டுமாக இருந்தால் தமிழ் கட்சி தலைவர்கள் கூட்டணியாக ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும். அப்போது தான் ஒற்றுமை மூலமாக பலமான சக்தியாக இலங்கை பாராளுமன்றத்தில் தமிழ் தேசியத்துக்காக குரல் கொடுக்க முடியும்.’
தீபச் செல்வன்,கவிஞர்
தமிழ் தலைமைகளின் நிலைமை தற்போது மாறியிருக்கிறது பல கட்சிகளாக பிரிந்து காணப்படுகிறது. தற்போதைய ஜனாதிபதியின் வருகை வடக்கு கிழக்கில் ஒரு கவர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஆபத்தானது. தமிழீழ விடுதலை புலிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய் யக் கூடாது எனவும் போரின் போது விடுதலை புலிகளை அழிக்க வேண்டும் என்றும் ஜே.வி.பியினர் கூறியிருந்ததுடன் 2009ல் யுத்த வெற்றியின் போது தங்களுக்கு பாரிய பங்கு உள்ளது என இவர்கள் கூறியிருந்தனர். இந்த வரலாறு தெரியா
மல் இளம் தலைமுறையினர் இன்று தடுமாறு கின்றனர். பேரினவாத சிங்கள கட்சிகளை நோக்கி தமிழர்கள் ஒரு போதும் செல்லக்கூடாது. பல கட்சிகள் தமிழ் தேசியத்தில் காணப்பட்டாலும் இவர்களுக்காக ஏமாந்து போகக் கூடாது. எங்கள் தமிழ் பிரதிநிதித்துவங்களை பாதுகாத்து தமிழ் தேசிய கட்சிகளுக்கு எமது தாயகத்தில் பாதுகாக்கப்பட்டு வாக்களிக்க வேண்டும் என்பதே என்னுடைய கருத்து’என்றார்.