முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டத்தினை மழுங்கடிக்கும் செயற்பாடுகளில் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஈடுபட்டுவரும் அதேவேளை அரசின் காணாமல்ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் நிகழ்சி நிரலினை நடைமுறைப்படுத்தி வருவதாக முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் 20.06.19 அன்று 837 ஆவது நாளாக போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்ற வேளையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கத்தின் தலைவி ம.ஈஸ்வரி ஊடக சந்திப்பொன்றினை நடத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கா அரசின் காணாமல் போனோருக்கான அலுவலகம் என்னத்திற்கு நாங்கள் வேண்டாம் என்று சொன்னதையும் ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை என்று போராட்டங்களை மேற்கொண்டு வெளிப்படுத்திவரும் இந்த சூழலில் நாங்கள் போரின்போது நம்பி இருந்த சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தினை நம்பித்தான் இறுதி போரின்போது வெள்ளைக்கொடியுடன் சென்ற வேளையிலும், அதிகளவானவர்கள் உயிரிழந்துள்ளார்கள் அதற்கு முன்னர் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் எங்களை விட்டு வெளியேறிவிட்டார்கள்.
சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினை நம்பித்தான் இறுதிப்போரின் போது வெள்ளைக்கொடியுடன் சென்று பலர் காணாமல் ஆக்கப்பட்டார்கள்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பதிவுகளை சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்திடம் தான் கொடுத்தோம் யாருக்கும் விபரங்கள் செல்லக்கூடாது சர்வதேசத்தின் நம்பிக்கையில் நல்ல தீர்வு வேண்டும் என்பதற்காக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விபரங்கள் திரட்டப்பட்டு இன்றுவரைக்கும் அந்த விபரம் அவர்களிடம் இருக்கின்றது.
தற்போது உள்ள காலகட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் தீவிரமாக வேலைசெய்துகொண்டு இருக்கின்றார்கள்.அதாவது அரசின் காணாமல் போனவர்கள் அலுவலகத்திற்கு ஆதரவாக அவர்கள் வேலைசெய்வது எங்கள் மனதிற்கு வேதனையாக இருக்கின்றது.
அரசின் காணாமல் போனோர் அலுவலகத்திற்கு யாரும் வேலைசெய்யக்கூடாது என்று நாங்கள் வெளிப்படையாக அறிவித்தோம். பாதிக்ப்பட்ட நாங்கள்தான் இதனை அறிவித்தோம்.
சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் இரகசிய முறையில் கிராமம் கிராமமாக மக்களை அழைத்து மாவட்டரீதியில் மக்களை அழைத்து சந்திப்பினை ஏற்படுத்தியது
வட்டுவாகல் தொடக்கம் ஓமந்தை,வவுனியாவரைக்கும் கிழக்கு மாகாணத்தில் வெள்ளைவான்களால் கடத்தப்பட்டது என்று பலதரப்பட்டவகையில் எங்கள் உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றது.
இவற்றை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தேடி தரமுடியாது என்றால் எங்கள் மக்களுக்கு அவர்களால் ஏன் வாழ்வாதாரம் கொடுக்கவெண்டும்.
எங்களுக்கு கஸ்ரம்தான் நாளாந்த நிலமை கஸ்ரமாக இருக்கின்றது பத்து ஆண்டுகள் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் காணாமல் போனவர்களுக்காக வேலைசெய்தார்கள் அந்த பத்து ஆண்டுகளாக மக்களிடம் இல்லாத அக்கறை தற்போது அரசின் காணாமல் போனோர் அலுவலகம் வந்தபின்னர் ஏன் இந்த அக்களை என்பது எங்களுக்கு கேள்விக்குறியாக இருக்கின்றது அரசின் காணாமல் போனோர் அலுவலத்தில் பதிவு செய்யவேண்டும் என்பதும்,அவர்களின் பணம் வாங்கவேண்டும் என்பதையும் நாங்கள் பிளையாக கருதுகின்றோம்.
இன்று நான் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றேன் என்றால் வேறுயாரின்தூண்டுதலிலோ சம்பளத்திற்கோ இல்லை என்னுடைய கணவர் எனக்கு கிடைக்கவேண்டும் என்று எல்லா அதிகாரிகளிடமும் போனேன் எவராலும் எந்த பதிலும் கிடைக்காத சூழலில் இது எனக்கு சந்தர்ப்பமாக கிடைத்தது எனது கணவரை தேடிக்கொண்டிருக்கின்றேன் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பதிவு இருக்கின்றது எனது கணவரை காணவில்லை என்று எனது கணவர் இருக்கின்றார் என்று புலனாய்வாளர்கள் என்றுசொல்லி வங்கியில் பணம் கட்ட சொல்லி 75 ஆயிரம் பணம் கட்டி அது தொடர்பிலும் நீதிமன்றில் வழக்கு இருக்கின்றது இவ்வாறு பல்வேறு ஆதாரங்களுடன் நான் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறேன்.
இவ்வாறான நிலையில் சர்வதேச செஞ்சிலுவைசங்கம் மக்களை பிளவுபடுத்தும் வேலையில் ஈடுபட்டு வருகின்றது. எங்கள் உயிர்போனாலும் பறவாய்இல்லை என்று துணிச்சலாக எங்கள் உறவுகளை தேடி போராடிவருகின்றோம்.
இந்த சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தினால் முடிந்தால் எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்று கேட்டுமட்டும் சொன்னால் காணும் மற்றும் படி மக்கள் போரில் சாகும்போது விட்டுவிட்டு ஓடும்போது என்ன யோசித்து ஓடினார்கள் அரசாங்கம் போகச்சொல்லும்போது போவார்கள் வரச்சொல்லும்போது வருவார்கள் காணாமல் போனோர் விபரங்கள் அனைத்தும் எடுத்து அரசிற்கு கொடுப்பார்கள் பிறகு போவார்கள் அதன்பின்னர் நாங்கள் படும் வேதனைகளை யாரிடம் சொல்லி அழுவது.
ஜ.சி.ஆர்.சி என்ற ஒரு வசனத்தினை நம்பித்தான் நாங்கள் இறுதிமட்டும் முள்ளிவாய்க்கால் வரையில் இருந்தோம் என்ன நடந்தது இறுதியில்.
எனது காணவரை தேடித்தான் நான் போராட்டத்தில் ஈடுபடுகின்றேன் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடும் அழுத்தத்தின் மத்தியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றேன் கடும் அழுத்தம் நானும் பிள்ளைகளும் தற்கொலை செய்வதுதான் இன்றைய நிலையில் முடிவாகா காணப்படுகின்றது.
எனது கணவரை தேடவே இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன் என்னை இவர்கள் வீணாக மனஸ்தாப படுத்தி நாங்கள் சம்பளத்திற்கு வேலைசெய்வதாக மக்களுக்கு கூறி எங்களை மக்களிடம் இருந்து திசை திருப்புகின்றார்கள் இவ்வாறான பொய்யா வசனங்களை கூறுகின்றார்கள் இதனால் என்னால் வாழமுடியவில்லை இந்த ஜ.சி.ஆர்.சியோ அல்லது வேறு நிறுவனங்களோ சரி பாதிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு தீர்வு கிடைக்கவேண்டும்.
எங்கள் வீட்டில் பிள்ளைகள் பட்டிணி நாங்களும் பாதிக்கப்பட்டுள்ளோம் எனக்கு வாழ்வாதாரத்திற்கோ அல்லது உதவிக்கோ ஜ.சி.ஆர்.சி எங்களை அழைக்கவில்லை காணாமல் போனவர்களை நாங்கள் தேடுகின்றோம் என்பதால் எங்களை ஒதுக்கு கின்றார்கள்.
எங்கள் காணாமல் போன உறவினர்களை ஜ.சி.ஆர்.சி அரசிற்கு விலை போய் கொண்டு பிரித்து பிரித்து கையாள்கின்றார்கள் நாங்கள் எங்கள் உறவுகளை அரசிடம் தான் கையளித்தோம் எங்களுக்கு உண்மையான நீதிவேண்டும் உண்மையில் நான் பதிக்கப்பட்டுள்ளேன் என்னால் முடியவில்லை நான் செத்தாலும் பொறுப்பு இந்த ஜ.சி.ஆர்சிதான் என்று தனது மனக்குமுறலை கண்ணீர் மல்ல தெரிவித்துள்ளார்.