நல்லாட்சி அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட வீட்டுத்திட்டத்தின் இடை நிறுத்தம் ஏன்? – ஹஸ்பர் ஏ ஹலீம்

1 1 2 நல்லாட்சி அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட வீட்டுத்திட்டத்தின் இடை நிறுத்தம் ஏன்? - ஹஸ்பர் ஏ ஹலீம்

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தால் மேற் கொள்ளப்பட்ட வீட்டுத் திட்டங்கள் இடை நிறுத்தப்பட்டுள்ளன. அப்போதைய வீடமைப்பு அமைச்சராக செயற்பட்ட தற்போதைய ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவினால் வடக்கு கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களில் வீட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் இந்த திட்டங்கள் இடை நடுவில் கைவிடப்பட்டுள்ளன. நல்லாட்சி அரசாங்கத்தில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக செயற்பட்டவர் ஜனாதிபதியாக மைத் திரி பால சிறிசேன செயற்பட்டார். அதன் பின் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக கோட்டாபாய ராஜபக்ச  அரசாங்கத்தை பொறுப்பேற்றதன் பின் குறித்த வீடமைப்பு திட்டங்கள் இடை நடுவே கைவிடப்பட்டன.

கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை போன்ற மாவட்ட ங்களில் குறித்த வீட்டுத் திட்டங்கள் முன்னெடுக் கப்பட்டு ஒவ்வொரு கிராமப் பகுதியிலும் வீடுகள் அமைக்கப்பட்டன. திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலகப் பகுதியிலும் வீடமைப்பு திட்டங்களை தேசிய வீடமைப்பு  அதிகார சபையினர் நடைமுறைப் படுத்தினர் முழுமையாக பூரணப்படுத்தப்பட்ட வீடுகளை வீடமைப்பு அமைச்சராக இருந்த சஜீத் பிரேமதாச அவர்கள் திறந்து வைத்து மக்கள் பாவனைக்காக கையளித்தார்.

1 2 1 நல்லாட்சி அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட வீட்டுத்திட்டத்தின் இடை நிறுத்தம் ஏன்? - ஹஸ்பர் ஏ ஹலீம்

இருந்த போதிலும் தமிழர் பகுதிகளில் பல வீடுகள் அத்திவாரம் இடப்பட்டும், முழுமையாகக் கட்டப்படாமல் இடை நடுவிலும் கைவிடப்பட்டு காடு மண்டி பாழடைந்தும் காணப்படுகிறன.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கிண்ணியா பிரதேச பயனாளி ஒருவரின் கருத்துப் படி, “தங்க நகைகளை அடகு வைத்து கட்டினோம். வீடுகள் முழுமையாக பூரணப்படுத்தப்படவில்லை. கட்டம் கட்டமாக பணம் தருவதாக கூறினார்கள். ஒன்றுமே நடக்கவில்லை’ என்றார்.

இவ்வாறாக நல்லாட்சி அரசாங்கத்தில் கட்டப்பட்ட பல வீடுகளை அதன் திட்டத்தை நடைமுறைப்படுத்திய ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாச அவர்கள் ஜனாதிபதியானால் இதனை நிறை வேற்றுவாரா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தற்போதைய ஜனாதிபதியாக இருக்கும் ரணில் விக்ரமசிங்க அப்போது பிரதமராக நல்லாட்சியில் செயற்பட்டார். மீண்டும் ஜனாதிபதியானால் குறித்த திட்டம் மீண்டும் கைவிட ப்படுமா? நிறைவேற்றப்படுமா? எனவும் மக்களின் எதிர்பார்ப்புக்கள் காணப்படுகிறது.

“ரணில் மைத்திரி அரசாங்கத்தில் சஜீத் பிரேமதாசவால் வீடு கட்டிக் கொடுப்பதாக தெரிவித்து முற்பணத்தொகைகளை செலவளித்து அத்திவாரமிட்டோம் வீடு கிடைக்கவில்லை. பணம் மாத்திரமே செலவாகியது “ என மற்றொரு வீட்டுப் பயனாளி தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.

1 3 1 நல்லாட்சி அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட வீட்டுத்திட்டத்தின் இடை நிறுத்தம் ஏன்? - ஹஸ்பர் ஏ ஹலீம் 1 4 நல்லாட்சி அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட வீட்டுத்திட்டத்தின் இடை நிறுத்தம் ஏன்? - ஹஸ்பர் ஏ ஹலீம்

மக்கள் தங்களுக்கான இருப்பிட வசதிகளை பெற்றுக் கொள்வதற்காக வீட்டுத் திட்டத்தின் பங்காளியாக வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு அரசியல்வாதிகள் மக்கள் பிரதிநிதிகளாக செயற் பட்டவர்கள் மூலமாக குறித்த வீடுகளை பெற எத்தனித்தார்கள். ஆனால் அது நடை முறையில் சாத்தியமாகவில்லை.

மக்கள் அவ்வப்போது தேர்தல் காலங்களில் வேட்பாளர்களின் வாக்குறுதிகளுக்காய் ஏமாந்து வாக்களிக்கின்ற போதிலும் இறுதியில் ஏமாற்றமடைந்து  பொருளாதார கஷ்டங்களை எதிர் நோக்குகின்றனர்.

இது தொடர்பில் பெண் தலைமைத்துவக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், ‘எனக்கு மூன்று பெண் பிள்ளைகள் ஒரு பிள்ளைக்கு வீடு இல்லை அப்போது வீடு தேவை என கோரப்பட்டு வீட்டுத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டு இடை நடுவில் கைவிட்டார்கள் கடன் பட்டு கட்டினேன் வீடு கிடைக்கவில்லை” என கவலையை வெளியிட்டார்.

திருகோணமலை மாவட்டத்தில் பல வீடுகள் இத் திட்டத்தின் போது நடைமுறைப்படுத் தப்பட்டன கிண்ணியா பிரதேச செயலக பிரிவு, தம்பலகாமம், குச்சவெளி, மூதூர்,  கந்தளாய், வெருகல், திருகோணமலை பட்டினமும் சூழலும் உள்ளிட்ட பல பிரதேச செயலகப் பிரிவிலும் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் முடிவுறுத்தாமல் கைவிடப்பட்டன.

தங்களுக்கு தேவையான இருப்பிட வசதிகளுக்காக வீடொன்றை குடும்பமாக நிம்மதியாக வாழ்வதற்காக எதிர்பார்த்தாலும் மக்கள் ஏமாற்றமடைந்தார்கள். ஜனாதிபதி வேட் பாளர்கள் அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பல வாக்குறுதிகளை மக்களுக்காக கூறப்பட்ட போதிலும் வெற்றியின் பின் நடை முறைப்படுத்து வதில்லை.

வடக்கு கிழக்கு சிறுபான்மை சமூகம் அவர்களது பல உரிமைகளுக்காக காத்திருக்கின்ற போதும் ஏமாற்றப்பட்டு உரிமைகள் மறுக்கப் படுகிறது அதில் ஒன்று தான் நல்லாட்சி அரசின் வீட்டுத் திட்டம். குறித்த வீட்டுத் திட்டங்கள் பாழடைந்து கவனிப்பாரற்று காணப்படுகிறது. அதிக பணத் தொகைகளை மக்கள் கடன்பட்டு  செலவளித்து வேலைத் திட்டங்களை ஆரப்பித்தும் கனவு நிறைவேறவில்லை. கடன்களை அடைக்க முடியாமலும் வங்கிகளில் அடகு வைத்த நகைகளை மீட்க முடியாமலும் இத் திட்டம் ஊடாக மக்கள் தடுமாறுகின்றனர்.

‘’வீடுகளை கட்டித் தருவதாகச் சொல்லி, ஏமாற்றி விட்டார்கள். வீடு இன்றி இருந்ததையும்  இழந்துள்ளோம். சஜீத் பிரேமதாச இதனை செய்து தருவார் என நம்புகிறோம் “ திருகோணமலையை சேர்ந்த வீடமைப்பின் பயனாளி ஒருவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஒவ்வொரு மாவட்ட பாராளுமன்ற உறுப்பி னர்களாலும் தேசிய அரசாங்கம் என்ற போர்வையில் வீடுகளை அமைப்பதற் கான திட்டங்கள் மாவட்ட ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டன. கட்சி ரீதியாக கட்சி சார்பில் இதனை வழங்கினர். ஆனால் பல வீட்டு தொகுதிகள் ஆட்சி மாற்றம் காரணமாக கைவிடப்பட்டன. 2015 தொடக்கம் 2019ம் ஆண்டு நல்லாட்சியாக காணப்பட்ட போதிலும் பல சிறுபான்மை இன கட்சிகள் இதனை பெற்றுக்கொண்டு தங்களது மக்களுக்காக இதனை வழங்கினர். இலங்கை தமிழ் அரசு கட்சி, மக்கள் காங்கிரஸ் , முஸ்லிம் காங்கிரஸ் உட்பட சிறுபான்மை சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி தலைவர்கள் தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவளித்து இதனை பெற்றுக் கொண்டனர். மறைந்த தலைவர் இரா.சம்மந்தன் அவர்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சி தலைவராக நல்லாட்சி அரசாங்கத்தில் செயற்பட்டவர்.

இவர்களுக்கான பல திட்டங்களை அரசாங் கம் வழங்கியது கம்பரெலிய உட்பட வீடமைப்பு திட்டங்களையும் நடை முறைப்படுத்தினார்கள். தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட துரைரட்ணசிங்கம் அவர்கள் அப் போது தமிழ் பேசும் மக்களுக்காக இந்த திட்டத்தை அரசாங்கத்துடன் இணைந்து மக்களுக்காக பெற்றுக் கொண்டார்.

சிறுபான்மை இன மக்களுக்கான அபி விருத்திகள் உட்பட சகல விதமான திட்டங்களிலும் பாகுபாடு காட்டப்பற்று இடை நிறுத்தப்படுவதும் அழிக்க முனைவதும் சிலரின் வங்குரோத்து அரசியலாக காணப்படுகிறது.

எனவே ஒட்டு மொத்த சமூகத்தின் இருப்புக்காக சிறுபான்மை கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் ஒன்றினைந்து கைவிடப்பட்ட திட்டங்களை ஆரம்பித்து பூரணமாக்க ஒன்றி னைந்து செயற்படுவோம்.