சுவிச்சர்லாந்து:நலவாழ்வு நிறுவனத்தின் 15 ஆம் ஆண்டு நிறைவும் நலவாழ்வு சஞ்சிகையின் 25 ஆவது சிறப்பிதழ் வெளியீடும்

129 Views

WhatsApp Image 2023 02 28 at 3.57.09 AM சுவிச்சர்லாந்து:நலவாழ்வு நிறுவனத்தின் 15 ஆம் ஆண்டு நிறைவும் நலவாழ்வு சஞ்சிகையின் 25 ஆவது சிறப்பிதழ் வெளியீடும்

நலவாழ்வு நிறுவனத்தின் 15 ஆம் ஆண்டு நிறைவும் நலவாழ்வு சஞ்சிகையின் 25 ஆவது சிறப்பிதழ் வெளியீடும் 25.02.2023 பி. ப 3 மணிக்கு சுவிஸ் தமிழ் மருத்துவத்துறை நிபுணர்களின் ஒழுங்கமைப்பில் சுவிஸ் யேர்மன் எல்லையில் உள்ள “Hotel Löwen Jestetten” இல் அறிவிப்பாளர் முல்லைமோகன் தலைமை யில் சிறப்புற நடைபெற்றது.

WhatsApp Image 2023 02 28 at 3.59.24 AM சுவிச்சர்லாந்து:நலவாழ்வு நிறுவனத்தின் 15 ஆம் ஆண்டு நிறைவும் நலவாழ்வு சஞ்சிகையின் 25 ஆவது சிறப்பிதழ் வெளியீடும்

சுவிஸ் முன்னாள் கல்விச்சேவை ஒருங்கிணைப்பாளர் தங்கராசா மகேந்திரராஜா சமூக செயற்பாட்டாளர்களான  விமல் – முத்தையா மற்றும் அகல்யா யோகநாதன் ஆகியோர் விழாச்சுடரினை  ஏற்றி வைத்தனர்.

WhatsApp Image 2023 03 01 at 11.31.38 AM சுவிச்சர்லாந்து:நலவாழ்வு நிறுவனத்தின் 15 ஆம் ஆண்டு நிறைவும் நலவாழ்வு சஞ்சிகையின் 25 ஆவது சிறப்பிதழ் வெளியீடும்

சித்த – ஆயுள்வேத வைத்தியர் இளங்கோ ஏரம்பமூர்த்தி வரவேற்புரை வழங்கினார்.

WhatsApp Image 2023 02 28 at 4.15.57 AM சுவிச்சர்லாந்து:நலவாழ்வு நிறுவனத்தின் 15 ஆம் ஆண்டு நிறைவும் நலவாழ்வு சஞ்சிகையின் 25 ஆவது சிறப்பிதழ் வெளியீடும்

மனநல வைத்திய நிபுணர் விஜயதீபன் பாலசுப்பிரமணியம் நலவாழ்வு நிறுவம் கடந்து வந்த 15 ஆண்டு காலத்தை தன் உரையில் பதிவு செய்தார், சஞ்சிகை ஆசிரியை மிதிலா தயாளலிங்கத்தின்   நூல் அறிமுகத்தை தொடர்ந்து, வெளியீட்டு உரையினை நலவாழ்வு நிறுவனத்தின் தலைவர் ஜெயக்குமார் துரைராஜா நிகழ்த்தினார்.

WhatsApp Image 2023 02 28 at 4.16.48 AM சுவிச்சர்லாந்து:நலவாழ்வு நிறுவனத்தின் 15 ஆம் ஆண்டு நிறைவும் நலவாழ்வு சஞ்சிகையின் 25 ஆவது சிறப்பிதழ் வெளியீடும்

நூல் அட்டைப்படத் திரைநீக்கத்தை நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் அந்தோணி நிக்கிலாப்பிள்ளை திறந்து வைத்தார்.

நூலின் முதற்பிரதியை நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணர் அருணி வேலழகன் வெளியீட்டு வைக்க திரு திருமதி செல்லையா இராஜசேகரன் அவர்கள் பெற்றுக்கொண்டனர்.  சிறப்பு பிரதிகளும் வழங்கப்பட்டன. சிறப்புரையினை சுவிஸ்  தமிழ்கல்விச்சேவை ஒருங்கினணப்பாளர் கலாநிதி பார்த்தீபன் கந்தசாமி வழங்கினர்.

WhatsApp Image 2023 03 01 at 11.39.04 AM சுவிச்சர்லாந்து:நலவாழ்வு நிறுவனத்தின் 15 ஆம் ஆண்டு நிறைவும் நலவாழ்வு சஞ்சிகையின் 25 ஆவது சிறப்பிதழ் வெளியீடும்

கருத்துரையினை  தாயகத்தில் போர்கலாத்தில் மருத்துவசேவையாற்றிய துரை கேதீஸ் மற்றும் சமூக சேவகைகளை தாயகத்தை நோக்கி வழங்கிக் கொண்டிருக்கும் விக்கி குலசிங்கம், விமல் முத்தையா ஆகியோர்  ஆற்றினர்.

குருதி மற்றும் மருத்துவ வேதியல் நிபுணர் கந்தரூபன் பாலசுப்பிரமணியம், நலவாழ்வு வின் இணையமுகவரி பற்றிய விளக்கத்தை திரையிட்டு விளக்கினார்.

WhatsApp Image 2023 02 28 at 4.11.22 AM சுவிச்சர்லாந்து:நலவாழ்வு நிறுவனத்தின் 15 ஆம் ஆண்டு நிறைவும் நலவாழ்வு சஞ்சிகையின் 25 ஆவது சிறப்பிதழ் வெளியீடும்

மனநல வைத்திய நிபுணர் இராஜ்மேனன் இராஜசேகரன், மருத்துவர் காந்தறூபன் மற்றும் மருத்துவர் அருணி அவர்களுடனான  கேள்வி நேரம் நிகழ்ச்சியை அறிவிப்பாளர் சிறப்பாக தொகுத்து  வழங்கினார்.

மருத்துவ துறையில் பயிலும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் முகமாகப் பாராட்டுக்களும்  வழங்கப்பட்டன.  வாழ்த்துரைகளை MTV இயக்குநர் சிவநேசன் மற்றும் மனநல வைத்தியர் கேமா நவரஞ்சனும் வழங்கினர்,  நன்றியுரையினை நிறுவனத்தின் உபதலைவி அருணி வேலழகன் வழங்கினார், நலவாழ்வின் 25ஆவது  இதழானது நோயும் நோய்கான தீர்வும் மட்டுமின்றி  எமது நல்வாழ்விற்கு தேவையான  கட்டுரைகளை தாங்கி வெளிவந்திருக்கின்றது, தாயகம், தமிழ்நாடு,, புலம்பெயர்தேசங்களிலுள்ள வைத்திய  துறைசார்ந்த நிபுணத்துவம் கொண்டவர்கள் மற்றும் சமூக நலன் சார்ந்தவர்களின் கட்டுரைகளும், எமது வாழ்வியலுக்கு நாளாந்தம் பயன் அளிக்கும்  கருத்துகளே நூல் முழுவதிலும் விதைக்கப்பட்டுள்ளடதுடன்.

WhatsApp Image 2023 02 28 at 4.03.11 AM சுவிச்சர்லாந்து:நலவாழ்வு நிறுவனத்தின் 15 ஆம் ஆண்டு நிறைவும் நலவாழ்வு சஞ்சிகையின் 25 ஆவது சிறப்பிதழ் வெளியீடும்

இனிவரும் நாட்களில் உலகத்தமிழர் பயன் பெறும் வகையில் இணைய சஞ்சிகையாகவும் வெளிவர இருக்கின்றது என்ற புதிய  செய்தியையும் நலவாழ்வு நிறுவனம் மகிழ்வுடன்  பகிர்ந்து கொண்டிருக்கின்றது.

Leave a Reply