Home செய்திகள் நடுவீதியில் சாரதி மீது ஏறிக் குதித்த பொலிஸ் அதிகாரி கைது – வைரலான வீடியோ

நடுவீதியில் சாரதி மீது ஏறிக் குதித்த பொலிஸ் அதிகாரி கைது – வைரலான வீடியோ

நடுவீதியில் வைத்து வாகனச் சாரதியொருவர் மீது மோசமாக தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர் பணியிலிருந்து இடைநீக்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டுள்ளார்.

பன்னிப்பிட்டியவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தை காண்பிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவிவருகின்றது. நபர் ஒருவரை வீதியில் இழுத்துவிழுத்தும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அவரின் மேல் ஏறி குதிப்பதை வீடியோவில் காணமுடிகின்றது.

இதன்போது குறிப்பிட்ட பொலிஸ் உத்தியோகத்தர் நிலத்தில் தவறிவிழுகின்றார். அருகேயிருந்த சிலர் பொலிஸ் உத்தியோகஸ்த்தரை தூக்கிவிடுகின்றார்கள்.

3 26 நடுவீதியில் சாரதி மீது ஏறிக் குதித்த பொலிஸ் அதிகாரி கைது - வைரலான வீடியோகுறிப்பிட்ட பொலிஸ் உத்தியோகத்தர் வாகனச்சாரதியை தரக்குறைவான வார்த்தைகளால் ஏசுவதை காணமுடிகின்றது. சமூக ஊடகங்களில் காணப்பட்ட இந்த வீடியோவை பார்த்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மஹரகம பொலிஸ்பிரிவை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு நடந்துகொண்டுள்ளார் பன்னிபிட்டியவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

லொறியொன்று போக்குவரத்து பொலிஸ் பிரிவை சேர்ந்த ஒருவரை விபத்துக்குள்ளாக்கியுள்ளது என தெரிவித்துள்ள பொலிஸ்பேச்சாளர் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதன்பின்னரே மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தரே குறிப்பிட்ட லொறிச்சாரதியை தாக்கியுள்ளார்.

வாகனச்சாரதி விபத்தை ஏற்படுத்தினால் கூட பொலிஸ்உத்தியோகத்தர் ஒருவர் இவ்வாறு நடந்துகொள்வார் என தன்னால் நம்பமுடியவில்லை என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ வேகமாகப் பரவியதையடுத்து அதற்கு கடுமையான கண்டனங்களும் எழுந்திருக்கின்றது. அதனையடுத்து பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட அவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

Exit mobile version