தொற்றாளர் தொகை அதிகரிப்பு – இணுவிலில் ஒரு பகுதியை முடக்குவதற்கு தீர்மானம்

156 Views

உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட இணுவில் கிராமத்தின் ஜே/190 கிராம சேவகர் பகுதியை முடக்குவதற்கு சுகாதார பிரிவு தீர்மானித்துள்ளது.

இந்தப் பகுதியில் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டமையை தொடர்ந்தே அந்தப் பகுதியை முடக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, சுகாதாரப் பகுதியினர் யாழ். மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணிக்கு அறிவித்துள்ளனர். செயலணியின் அனுமதி கிடைத்ததும் இணுவிலின் ஜே/190 கிராம சேவகர் பகுதி முழுமையாக முடக்கப்படும் என்று தெரிய வருகின்றது.

இதேவேளை, யாழ். மாவட்டத்தில் மூன்று கிராம சேவகர் பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply