தொற்றாளர்களின் அதிகரிப்பால் ஜூன் 14 வரை பயணத்தடை நீடிப்பு – இராணுவத் தளபதி

118 Views

இலங்கை முழுவதும் தற்போது அமுலில் உள்ள முழுநேரப் பயணத் தடை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது எனக் கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அமுலில் உள்ள பயணத் தடை எதிர்வரும் 7ஆம் திகதி அதிகாலை 4 மணிக்குத் தளர்த்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, இராணுவத் தளபதி நேற்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை பயணத் தடை நீடிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையைக் கருத்தில்கொண்டு பயணத் தடை நீடிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply