திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஆறு பிரதானமான தமிழ் முஸ்லீம் பிரதேசசெயகங்களில் தீவிர நில அபகரிப்பு இடம் பெறு கின்றது.இதன் காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் சனத்தொ கையில் சிங்களவர்கள் 27 வீதமாக காணப்படுவதுடன் 36வீதமான நிலத்தை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள் ளனர்.
புவியியல் ரீதியில் வடக்கு கிழக்கை இணைக்கும் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவு,கடந்த பத்து வருடங்களில் மிகமோசமாக பறிபோயுள்ளது. இந்த பிரதேச செயலா ளர் பிரிவில் ஆகக்குறைந்தது 41164 நிலத்தை அபகரித்துள்ளனர்.இது ஒட்டு மொத்த நிலப்பரப்பின் 50 வீதமாகும் என ஓக்லாண்ட் நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்திருந் தது.
இந்த நிலையில். திருகோணமலை மாவட்டம், குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக் குட்பட்ட திரியாய் பகுதியில் உள்ள தனியார் விவசாய காணி பெளத்த மதகுரு ஒருவரின் அடா வடித்தனத்துக்கு உள்ளானது.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் போது தேர்தல் வாக்குறுதிகளிலும் தனது சமூக ஊடக பதிவுகளிலும் இந்த விவகாரம் தொடர்பில் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதாக தேசிய மக்கள் சக்தியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் அருண் ஹேமச்சந்திர கூறியிருக்கிறார்.
இது போன்று இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட சண்முகம் குகதாசனும் வாக்குறுதி களை தெரிவித்திருக்கிறார். இது தவிர ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் போட்டியிட்டு நாடாளு மன்ற உறுப்பினராக தெரிவாகிய இம்ரான் மஹ் ரூப் மக்கள் பிரச்சினைக்கான தீர்வுக்காக குரல் கொடுப்பதாக கூறியிருக்கிறார்.
இவ்வாறாக தமிழர் தாயகமான திரு கோணமலை மாவட்டத்தில் பல பிரச்சினைகள் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனை புதிதாக தெரிவாகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்த்து வைப்பார்களா என்பது கேள்விக் குறியே. தேர்தல் காலங்களில் சொல்லப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்களா என்பதை சற்று பொறுத்திருந்து பார்ப்போம்.
தங்களுக்கு சொந்தமான காணிக்குள் விவசாய பெரும்போக நெற் செய்கைக்கான இயந்திரம் மூலமான உழுதுதல் நடவடிக்கையின் போது காணிக்குள் புகுந்த பௌத்த பிக்கு அட்டகாசம் ஏற்படுத்தியதாக புல்மோட்டையை சேர்ந்த ஜெ.புஹாரி தெரிவிக்கிறார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிப்பதாவது “ வளத்தாமலை பகுதியில் காலம் காலமாக எங்கள் விவசாய காணியில் விவசாயம் செய்து வந்தோம். தற்போது பௌத்த பிக்குவினால் பெரும்போகச் செய்கைக்காக வயல் நிலத்தை உழவு மேற் கொள்ளும் போது தடுத்து நிறுத்தப்பட்டது. இம் முறை குத்தகைக்கு எனது சிறிய தந்தைக்கு காணியை வழங்கியிருந்தேன். இருந்த போதிலும் பௌத்த பிக்குவின் அட்டகாசம் காரணமாக காவல்துறையில் முறைப்பாடு செய்த போது அதனை மீறியும் தடையை ஏற்படுத்தி வருகிறார். இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது “ என்றார்.
இது விடயமாக இலங்கை மனித உரி மைகள் ஆணைக்குழுவில் 18.10.2024 ந் திகதி அன்று திருகோணமலை பிராந்திய நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்ததாகவும் கிழக்கு மாகாண ஆளுனர், ஜனாதிபதி செயலகம் போன்றவற்றுக்கான முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டும் நிரந்தர தீர்வு இன்று வரைக்கும் (2024.11.16) கிடைக்கவில்லை என காணிக்கு சொந்தமான புஹாரி என்பவர் மேலும் தெரிவித்தார்.
இது தவிர அதனை அண்டிய பொன் மலைக்குடா பகுதியில் முஸ்லிம்களுக்குரிய ஜனாசா அடக்கம் செய்யும் மையவாடிக்குள் ஜனாசாவை அடக்க விடாது புனித பூமி என்ற போர்வையில் அரிசிமலை பௌத்த பிக்குவின் அடாவடி 12.10.2024 அன்றைய நாள் இடம் பெற்றது காவல்துறையினரின் பாதுகாப்புக்கு மத்தியில் மீண்டும் ஜனாசா நல்லடக்கம் செய்யப்பட்டது. அநுர குமார ஆட்சியில் கூட முஸ்லிம் மக்களுடைய மத சுதந்திரம் பறிக்கப்படுவதை இதன் மூலமாக காணலாம்.
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை ஆசனத்தை கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி வடக்கு கிழக்கு மக்கள் பிரதிநிதிகளில் பல புதிய முகங்களை பெற்றுள்ளனர். இந்த புதியவர்கள், திருகோணமலை உள்ளிட்ட தமிழர் பிரதேசத்தில் காணப்படும் நில அபகரிப்பு தொடர்பில் கரிசனை காட்ட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப் பாக காணப்படுகிறது.
தேர்தல் காலங்களில் பல மக்கள் சந்திப்பில் திருகோணமலை மாவட்டத்தில் தெரி வாகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளார்கள்.தமிழ் மக்களிடத்தில் தமிழர் பிரதி நிதித்துவம் பாதுகாக்கப்பட வேண் டும் என இலங்கை தமிழ் அரசு கட்சி சார்பில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகிய ச.குகதாசன் கூறியிருந்தார். எனவே மக்கள் பிரச்சினைகளை பாராளு மன்றத்திலும் வெளியிலும் பேசி நிரந்தர தீர்வை பெற் றுக் கொடுக்க முயற்சிக்க வேண்டும்.
புனித பூமி என்ற போர்வையில் விவசாய காணிகளை தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தம் என பல ஏக்கர்களை அடாத்தாக அபகரிப்புச் செய்யும் அரிசி மலை திரியாய் குறித்த பௌத்த பிக்குவான பாணமுறே திலகவன்ச தேரர் கடந்த கோத்தபாயவின் ஆட்சி காலத்தில் ஜனாதிபதியின் கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணியின் உறுப்பினராக செயற்பட்டு வந்தவர் மட்டுமல்லாது வடகிழக்கு பௌத்த சங்கத்தின் தலைவர் எனவும் தெரிய வருகிறது.
அரசாங்கத்தினால் இவருக்கு மெய்ப்பாது காவலரும் (MSD) வழங்கப்பட்டுள்ளது . ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆட்சியின் பின் அதிரடியாக முன்னால் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு நீக்கப்பட்ட போதும் இவ்வாறு பௌத்த பிக்குவுக்கு மாத்திரம் ஏன் பாதுகாப்பு வழங்கப்படுகிறது என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
திரியாய்க் கிராமத்தின் பூர்வீக வயல் நிலங்களில் முக்கிய வயல் வெளிகளான வளத் தாமரை ,ஆதிக்காடு, ஒட்டுப்புல்மோட்டை, நீராவிக்கண்டல் ,வேடன்குளம் உள்ளடக்கிய வயல் நிலங்களில் மக்கள் பரம்பரை பரம்பரையாக வயற்செய்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் புல்மோட்டை அரிசிமலைப் பிக்குவினால் அடாவடியாக 88 ஏக்கர் பொதுமக்களின் உறுதிக் காணிகள் கையகப் படுத்தப்பட்டுள்ளன.“இந்த விவசாய காணிகள் எங்களுடைய சொந்த பூமி. இதற்குள் விவசாயம் செய்ய முடி யாது தடுத்து நிறுத்தும் பௌத்த பிக்குவினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. உடனடியாக தீர்வினை பெற்றுதாருங்கள்” என திரியாய் விவசாய சம்மேளனத்தின் தலைவர் தெரிவித்தார்.
மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என கூறப்பட்ட தேர்தல் கால வாக்குறுதிகள் நிறைவேறுமா என்ற சந்தேகம்இவ்வாறு நில அபகரிப்பால் பாதிக்கப்படும் மக்களுக்கு இருக் கின்றது.