அதிகரிக்கும் கொரோனா தொற்று – 42 பேர் நேற்று பலி! 3,264 பேருக்கு தொற்று

155 Views

இலங்கையில் கொரோனாவால் மேலும் 42 பேர் மரணமானதாக நேற்றிரவு அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இலங்கையில் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் தொகை 1,608 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் நேற்று மாத்திரம் 3 ஆயிரத்து 264 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து நாட்டில் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 95 ஆயிரத்து 811 ஆக எகிறியுள்ளது.

கொரோனாத் தொற்று காரணமாக வைத்தியசாலைகள் மற்றும் தனிமைப்படுத்தல் மையங்கள் என்பவற்றில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 848 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 62 ஆயிரத்து 397 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply