தொடர்ந்தும் தமிழர் வரலாறுகள் மறைக்கப்படுமா? – வல்வை ந. அனந்தராஜ்

கடந்த காலம், தற்பொழுது மற்றும் அரசு தற்போது கொண்டு வரவுள்ள   கல்வித் திட்டத்
திற்கும் என்ன வித்தியாசம்? இதனால் தமிழ் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?
ஒரு ஆசிரியராக, அதிபராக, உதவி கல்வி பணிப்பாளராக,  கல்வி அமைச்சிலே கடமையாற்றி இருக்கின்றேன். அதன் பின்னர் கல்வி மேம்பாடு சம்பந்தமாக அதாவது முகாமைத்துவம் சம்பந்த மாக உலக வங்கியிலே நிபுணத்துவராகவும்   கட மையாற்றி இருக்கிறேன். அந்த வகையில் எனக்கு ஒரு நீண்ட அனுபவம் இருக்கின்றது. இது தொடர்பாக சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் ரணில் விக்ரமசிங்க கல்வி அமைச்சராக இருந்த பொழுது நான் ஒரு அறிக்கை அனுப்பி இருந்தேன். இந்த பாடத்திட்டங்களில் உள்ள குறைபாடு, தமிழர் வரலாறுகள் இருட்டடிப்பு செய்யப்படுகிறது என்று. இலங்கை வானொலியிலே அது சம்பந்தமான பேட்டி ஒன்றையும் கொடுத்திருந்தேன். நான் இலங்கை வானொலியில் பேட்டி கொடுத்த பொழுது அநேகமான  முஸ்லிம் அரசியல்வாதிகள், முஸ்லிம் கல்விமான்கள் என்னோடு தொடர்பு கொண்டு நீங்கள் நல்ல விஷயங்களை கூறி இருக்கின்றீர்கள். இது உண்மையில் நடைமுறையில் பேசப்பட வேண்டிய விடயம்  என்றார்கள்.
அதேபோல   பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஒருவரும்  என்னுடன் உரையாடினார். ஆனால் அதற்குப் பிறகு எந்த ஒரு அரசியல்வாதியும் இது சம்பந்தமாக பேசவில்லை. நான் என்ன சொல்ல வந்தேன் என்றால், இந்த பாடத்திட்டம் பிரித்தானியர் ஆட்சி காலத்திலே இருந்து இன்று வரையில் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண் டிருக்கிறது. அதில் சின்ன சின்ன மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
அதாவது சிங்கள ஏகாதிபத்தியம் தனது கொள்கைகள், தனது   ஆள்புல எல்லையை நிர்ணயிப்பதற்கான ஒரு மாற்று வழியாக இந்த பாடத்திட்டங்களில் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கின்றதே ஒழிய ஒரு சமத்துவமான எல்லா இன மக்களுக்கும் பொருந்தக்கூடிய ஒரு கல்வி முறையை ஏற்படுத்தவில்லை. அந்த வகையில் காலத்துக்கு காலம் பல கல்வி திட்டங்கள் உருவாக்கப்பட்டது. 72 ஆம் ஆண்டு 77ஆம் ஆண்டு 83 ஆம் ஆண்டு இப்படியே வந்து கொண்டு இருந்தது.  புதுசு புதுசாக ஒவ்வொரு அரசாங்கங்களும் வரும் பொழுது கல்வி திட்டங்களை மாற்றுவார்கள். நீங்கள் கூறியது போல் நாங்கள் படித்த காலங்களில் தனியார் அச் சிட்டப் பாடப் புத்தகங்களில் தான் படித்தோம்.  இப்பொழுது கல்வி வெளியீட்டு திணைக்களம் தான் புத்தகங்களை அச்சிடுகின்றது.  தனியார்   புத்தகங்களை அச்சிடும்   பொழுது இலங்கைத் தமிழ் அரசியல், தமிழர் வரலாறு, ராஜ்ஜியங்கள் என அனைத்தும் உள்ளடக்கப்பட்டது.
இலங்கையில பிரித்தானியர் வருகைக்கு முன்னர் மூன்று அரசுகள் இருந்தது. அதில் தமிழ் அரசு என்ற  யாழ்ப்பாண ராஜ்ஜியம் இருந்தது. அது நான் படித்த காலத்தில் இரண்டாம் வகுப்பிலே   சின்ன ஒரு வரலாறாக இருந்தது. சங்கிலியன் மன்னன், பண்டார வன்னியன் ஆகியோரின் வரலாறுகளும்  இருந்தது.
எனவே தமிழர்களாகிய எங்களுக்கு  அதைப்பற்றிய அறிவு இருந்தது.  நாங்களும் ஆண்ட இனம் என்று. ஆனால் அது காலப்போக்கில் வந்த அமைச்சர்கள், அதாவது முகமது என்ற முஸ்லிம்  அமைச்சர் கல்வி அமைச்சராக நியமிக்கப் பட்டமை, அதற்கு பின்னர் சிங்கள கல்வி அமைச் சர்கள் என நியமிக்கப்பட, வரலாறுகளும் மாற்றப் பட்டுக்கொண்டு வந்துள்ளது.
முதல் முதல் பாக்கு நீரிணை நீந்தி நீச்சல் கடந்த நவரட்ண சுவாமியினுடைய படத்தோடு அவருடைய வரலாறு மூன்றாம் நான்காம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் இருந்தது. இப்படியான வரலாறுகள் சாதனைகள் அனைத்தும் புத்தகங்களில் அச்சிட்டுக்கொண்டு வரும் போது எங்களுக்கு ஒரு பரந்த அறிவு கிடைத்தது. இவ்வாறு வரலாறுகள் கிடைத்ததனாலேயேதான்  நாட்டை நேசிக்கிற தன்மையும் வந்தது.  ஆனால் பிறகு வந்த அரசாங்கங்கள்  தமிழர் வரலாறுகளை இருட்டடிப்பு செய்தது.
இலங்கையில தமிழ் மன்னர்கள் ஆண்டார்கள். தமிழ் நூல்கள் வெளிவந்தன. தமிழ் வைத் தியர்கள் இருந்தார்கள். இந்த வரலாறு  இன்றைக்கு படிக்கின்ற மாணவர்களுக்குத் தெரியாது. ஆனால் நாங்கள் படித்திருக்கிறோம். போர்த்துகேயருக்கு எதிராக, ஒல்லாந்தருக்கு எதிராக தமிழ் மன்னர் கள் எவ்வாறு போரிட்டார்கள். சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பிரித்தானிய அரசாங் கத்துக்கு எதிராக சிங்கள மக்களுடன் சேர்ந்து தமிழ் மக்களும் போராடினார்கள்.
ஆனால் சுதந்திரம் கிடைத்த பின், சிங்கள அரசியல் தலைவர்கள், தமிழ் அரசியல்வாதிகளை விலைக்கு வாங்கியது போல், அவர்களின் வாயை மூடச்செய்து விட்டார்கள்.  அதுக்கு பிறகு வந்த அரசியல் அமைப்புகளில்  தமிழ் மறுக்கப்பட்டு, பௌத்த சிங்கள அரசாகத்தான் பிரகடனப்படுத்தினார்கள்.
தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் வாழ்கின்ற ஒரு பூமியில் சிங்கள பெளத்த அரசிய லமைப்பை 72 ஆம் ஆண்டு  ஸ்ரீமாவோ பண்டார காலத்தில் கொண்டு வந்தது. அப்பொழுது கெல் வின் ஆர்டி செல்வா,   சமத்துவம் பேசிக் கொண்டிருந்தவர். அவர்தான் அரசியல் அமைப் புக்கான அமைச்சராக கூட இருந்தவர். அதன் பிறகு வந்து பாடத்திட்டங்கள் அனைத்தும்  இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.
இப்போது பிரதமர் ஹரினி அவர்கள் பாடத்திட்டத்தை மாற்றப்போவதாக குறிப்பிட்டி ருந்தாலும் கூட அவர் எப்படி மாற்றப்போகிறார். ஏற்கனவே இருக்கின்ற பாடத்திட்டத்தினால் மாற்றங்களை கொண்டுவரப்போகிறாரா அல்லது முற்றாகவே 21 ஆம் நூற்றாண்டுக்கான அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்குரிய ஒரு கல்வித் திட்டத்தை கொண்டுவரப்போகிறாரா? என்று இதுவரை எதுவுமே சொல்லப்படவில்லை. பாடத் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்துவதாக இருந்தால் பொது மக்களிடம் இருந்து அபிப்பிராயங்கள் கேட்கப்பட வேண்டும்.
தமிழர்களுடைய  பாடத்திட்டங்களிலே இருந்த வரலாறுகள் எல்லாம் மெல்ல மெல்ல அகற்றப் பட்டிருக்கின்றது.  மக்களால் தெரிவு செய்யப் பட்டவர்கள் என்ன செய்கின்றார்கள்?  
எனக்கு ஒரு ஆச்சரியம் என்னவென்றால், இந்த பாராளுமன்றத்துக்கு போகின்ற  உறுப்பி னர்கள், வாய்க்கால் தண்ணி வரவில்லை. அந்த மதகு உடைந்துள்ளது என்பதை எடுத்து கூற  தமிழ் மக்கள் அவர்களை பாராளுமன்றம் அனுப்பி வைக்கவில்லை.
எங்களுடைய மண் மற்றும் கல்வியில் மொழி உரிமை பறிக்கப்பட்டு வருகிறது. அதைப் பற்றி எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் பேசுவ தில்லை.  இந்த புதிய பாடத்திட்டத்தை உரு வாக்கும் பொழுது  தமிழ் முஸ்லிம் மக்களை உள்ளடக்க வேண்டும், என்று இதுவரைக்கும் ஒரு அரசியல்வாதிகளும்  பேசியதாக தெரியவில்லை.
பிரதமர் ஹரினி ஒரு கல்விமான். ஒரு விரிவுரையாளராக இருந்துள்ளார். அவருக்கு ஒரு தூர நோக்கு இருக்கின்றது. ஆனால் எந்த அளவுக்கு சிங்கள அரசியல்வாதிகள்  அவருக்கு ஒத்துழைப்பார்கள் என்று தெரியவில்லை.
ஏனென்றால் அனுரகுமார திசநாயக்க வரும்பொழுது ஒரு பரபரப்பாகத்தான் வந்தார்.   ஆனால் இன்றை வரைக்கும் எந்தவிதமான மாற்ற மும் கொண்டு வரவில்லை. ரணில் விக்ரமசிங்க காலத்தில் என்ன நடைமுறையில் இருந்ததோ அந்த நடைமுறை தான் இன்றைக்கும் பேணப்படுகிறது.
ஒரு காலத்தில் கல்வியில் மலையக மக்கள் பாதிப்பைச் சந்தித்திருந்தனர். ஆனால் இன்றைக்கு   மலையக அரசியல்வாதிகள் எடுக் கின்ற சில நடவடிக்கைகள் காரணமாக அங்கு கல்வித்தரம் உயர்ந்து கொண்டு வருகின்றது. அதேபோல முஸ்லிம் அரசியல்வாதிகள் எடுக்கிற நடவடிக்கைகள் காரணமாக முஸ்லிம்களின் கல்வித்தரம் உயர்ந்து கொண்டு வருகின்றது. ஆனால் தமிழ் அரசியல்வாதிகள் எவருமே  கல்வி யிலே எந்தவிதமான அக்கறையும்  காட்டவில்லை.