தொடரும் கடத்தல்கள்- மகிந்தாவை சந்திக்கிறார் சுவிஸ் தூதுவர்

கடந்த 25 ஆம் நாள் சிறீலங்காவில் உள்ள சுவிற்சலாந்து தூதரகத்தில் பணியாற்றிய பணியாளர் ஒருவர் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் சிறீலங்காவின் புதிய பிரதமர் மகிந்தா ராஜபக்சாவை சுவிற்சலாந்து தூதுவர் இன்று சந்திக்கவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய அரசு பதவியேற்ற பின்னர்  வெள்ளை வானில் வந்த இனந்தெரியாத நபர்கள் இந்த கடத்தலை மேற்கொண்டிருந்தனர். எனினும் கடத்தப்பட்டவர் பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்த கடத்தல் தொடர்பான விசாரணைகளை சிறீலங்காவில் இருந்து அண்மையில் தப்பியோடிய குற்றப்புலனாய்வு அதிகாரி நிசந்தா சில்வா மேற்கொண்டிருந்தார்.