03. பொதுகூட்டணியை அமைத்து எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியும் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியும் இணங்கியுள்ளன.
இந்த விடயம் குறித்து அந்த இரண்டு கட்சிகளின் பிரதிநிதிகளும் நேற்றிரவு கலந்துரையாடியுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைய வேண்டும் என்ற யோசனை ஐக்கிய தேசிய கட்சியால் இதன்போது முன்வைக்கப்பட்டது.
இதனை ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்தமையால் இரண்டு கட்சிகளும் இணைந்து பொதுக்கூட்டணி ஒன்றை அமைக்க இணக்கம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.