Home செய்திகள் தெற்காசியாவிலேயே சிறந்த ஊழல் எதிர்ப்புச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் விரைவில் சமர்ப்பிக்கப்படும் – ஜனாதிபதி

தெற்காசியாவிலேயே சிறந்த ஊழல் எதிர்ப்புச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் விரைவில் சமர்ப்பிக்கப்படும் – ஜனாதிபதி

114 Views

தெற்காசியாவிலேயே சிறந்த ஊழலுக்கு எதிரான சட்டத்தை இலங்கை பாராளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

குறித்த சட்டமூலத்திற்கான அமைச்சரவை அங்கீகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, எதிர்காலத்தில் எதிர்க்கட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி பாராளுமன்றத்தில் சமர்பிப்பதாகவும் தெரிவித்தார்.

ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (23) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Leave a Reply

Exit mobile version