தென் சீனக் கடலில் அமைக்கப்பட்டுள்ள கடலுக்கடியிலான ஆய்வுகூடம்

181 Views

ஆழ்கடலில் சுயமாக தொழிற்படும் ஆய்வுகூடம் ஒன்றை தென்சீனக் கடல் பகுதியில் சீனா விஞ்ஞானிகள் அமைத்துள்ளனர்.

நீண்டகாலம் சுயமாக செயற்படும் இந்த ஆய்வுகூடம் Raman spectroscopy ஆய்வு உபகரணங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடலடியில் உள்ள சூழலியல், காலநிலை மாற்றத்தின் தாக்கம், உயிரினங்களின் தோற்றம் போன்ற தகவல்களை அறிய முடியும் என இந்த திட்டத்தின் தலைவர் பேராசிரியர் சான்ங் சின் கடந்த புதன்கிழமை(7)  தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வுகூடத்தில் உள்ள உபகரணங்கள் மூலம் சிறிய அலைவரிசையுள்ள அதிர்வுகளையும் கண்காணிக்க முடியும் எனவும், மிகவும் பாதகமான காலநிலையில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பில் ஆராய முடியும் எனவும் பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கான திட்டம் 2020 ஆம் ஆண்டு வகுக்கப்பட்டதுடன், அது 2021 ஆம் ஆண்டு பரீட்சித்து பார்க்கப்பட்டது. 4,500 மீற்றர் ஆழமுள்ள கடலிலும் இந்த ஆய்வுகூடம் பணியாற்றும் தகமைகொண்டது என தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply