Tamil News
Home செய்திகள் தென்னிலங்கை மீன்களை வாங்க மறுக்கும் மக்கள்

தென்னிலங்கை மீன்களை வாங்க மறுக்கும் மக்கள்

இலங்கையின் மேற்கு கடலில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் கடல் மாசு அடைந்துள்ளதால் தென்னிலங்கை மக்கள் மேற்கு கடல்பகுதியில் பிடிக்கும் மீன்களை வாங்க மறுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேலியகொடவில் உள்ள மொத்த மீன் விற்பனை சந்தையில் மீன்கள் வாங்குவாரற்று தேங்கிகிடப்பதாக மீன் வியாபாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எம்மிடம் அதிக மீன்கள் உள்ளது ஆனால் வாங்குவதற்கு தான் ஆட்கள் இல்லை. எனவே அதனை விநியோகிப்பதற்கு அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த அனர்த்ததத்தினால் பெருமளவான மீனவர்கள் தொழிலை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேசமயம், வடக்கு கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதி பாதுகாப்பாக உள்ளதுடன், அங்கு தற்போது மீன்பிடி பருவநிலையும் உள்ளது. எனவே அங்குள்ள மீன்களை தென்னிலங்கைக்கு விநியோகம் செய்ய வேண்டும் என இலங்கை மீன்வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் தினேஸ் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இராசாயணக்கழிவுகள் கலந்துள்ள கடற்பகுதிகளில் பிடிக்கப்படும் மீன்களை உண்பதை தவிர்க்குமாறு கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தின் விவசாய மற்றும் கடல் உணவுத்துறை பிரிவின் தலைவர் கலாநிதி லங்கா விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார்.

Exit mobile version