தெற்கத்தைய தலைமத்துவ பிரதிநிதித்துவத்திற்கு வாக்களித்தவர்கள் தங்கள் முடிவுகளை மீள்பரிசிலினை செய்து எதிா் காலத்தில் தமிழ் தேசியத்துடன் இருக்கின்றவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவரும் வட மாகாண சபையின் அவைத் தலைவருமான சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.
உலகத் தமிழராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 51 வது ஆண்டு நினைவேந்தல் இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் உலக தமிழராட்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்கள் நினைவுதூபியில் இடம்பெற்றது. நினைவேந்தலில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.