Tamil News
Home செய்திகள் தென்னிலங்கைக்கு யாழ் மரக்கறிகள் – விலை குறையும் என எதிர்பார்ப்பு

தென்னிலங்கைக்கு யாழ் மரக்கறிகள் – விலை குறையும் என எதிர்பார்ப்பு

தென்னிலங்கையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் மரக்கறிகளின் விலை என்றுமில்லாதவாறு அதிகரித்திருந்தது, ஆனால் தற்போது யாழ்பாணத்திலும், கற்பிட்டியிலும் இருந்து அங்கு செல்லும் மரக்கறிகளால் விலைகள் குறையும் சாத்தியங்கள் ஏற்பட்டள்ளதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவித்துள்ளன.

எனினும் சிவப்பு வெங்காயத்தின் விலை தற்போதும் கிலோ ஒன்று 1200 ரூபாய்களாக விற்பனை செய்யப்படுவதாகவும், எகிப்து, பங்களாதேஸ் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் இருந்து கடந்த மாதம் 29,000 தொன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டபோதும், மக்களின் தேவையை அது நிறைவுசெய்யவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, தற்போதைய சூழ்நிலையை பயன்படுத்தி அதிக இலாம் ஈட்டும் நோக்கத்துடன் பலர் விதை வெங்காயத்தை விற்பனை செய்துள்ளதால் எதிர்காலத்தில் விதை வெங்காயத்திற்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த வருடம் ஒரு கிலோ விதை வெங்காயம் 8000 ரூபாய்களுக்கு விற்பனை செய்யப்பட்டபோதும், அதன் விலை 13000 ஆக அதிகரிக்கும் சாத்தியங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version