Home உலகச் செய்திகள் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 109ஆக அதிகரித்துள்ளது.

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 109ஆக அதிகரித்துள்ளது.

418 Views

ஏகன் கடற்பகுதியில் கடந்த மாதம் 30ஆம் திகதி நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் காரணமாக துருக்கி கிறீஸ் நாடுகள் பாதிப்பிற்குள்ளாகின. முக்கியமாக துருக்கியின் கடற்கரை நகரான இஸ்மிர் கடும் பாதிப்பைச் சந்தித்தது.

இங்கு பல்வேறு கட்டடங்கள் தரை மட்டமாகின. கட்டட இடிபாடுகளுக்கிடையே சிக்கியுள்ளோரை மீட்கும் பணியில் அந்நாட்டு மீட்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அடுக்குமாடிக் குடியிருப்பின் இடிபாடுகளில் சிக்குண்டு 14 மற்றும் 8 வயது நிரம்பிய சிறுமிகள் நேற்று மீட்கப்பட்டனர்.

இதுவரை நூற்றிற்கும் மேற்பட்டோர் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். துருக்கியில் நிகழ்ந்த நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 109ஆக அதிகரித்துள்ளது. அங்கு ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

நிலநடுக்கம் 7 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் பின்னர் ஏகன் கடற்பகுதியில் உள்ள சமோஸ் தீவில் சிறிய அளவிலான சுனாமி உருவானதாகவும் அறிவிக்கப்படுகின்றது.

NO COMMENTS

Leave a Reply

Exit mobile version