துருக்கியால் மட்டுமே ஐரோப்பாவை காப்பாற்ற முடியும் – ஏர்டோகன்

ஐரோப்பிய ஒன்றியத்தை அதன் வீழ்ச்சியில் இருந்து துருக்கி யால் மட்டுமே காப்பாற்ற முடியும் என துருக்கியின் அதிபர் ஏர்டோகன் கடந்த திங்கட்கிழமை(24) இடம் பெற்ற தொலைக்காட்சி உரையின் போது தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதார வீழச்சி, அரசியல் பின்ன டைவு, அனைத்துலக மட்டத்தில் ஏற்பட்டுவரும் இராஜதந்திர பின்னடைவுகள், பாதுகாப்பு பின்ன டைவு போன்ற சிக்கல்களால் தவித்து வருகின்றது. அனைத்துலக மட்டத்தில் அது தனது பிடியை இழந்து வருகின்றது. இந்த நில மைகளில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்தை காப்பாற்ற வேண்டும் எனில் அது துருக்கியால் மட்டுமே முடியும். ஐரோப்பிய ஒன்றியத்தின் தொழிலாளர் வினைத்திறன் வயதானவர்களின் எண்ணிக்கை ணால் வீழச்சி கண்டு வருகின்றது. அது பொருளா தாரத்தையும் கடுமையாக பாதித்து வருகின்றது.
நிலமையை ஐரோப்பிய ஒன்றியம் விரைவாக புரிந்துகொள்ள வேண்டும், பழைய தவறுகளை அவர்கள் மீண்டும் செய்யக்கூடாது. துருக்கியை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைப்பதன் மூலம் இரு தரப்பும் அதிக நன்மை களை எட்ட முடியும். குடியேற்றவாசிகளுக்கு எதிரான நடைவடிக்கைகள் மற்றும் இஸ் லாத்திற்கு எதிரான போக்குகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிகரித்து வருகின்றன. இது மிகவும் ஆபத்தானது என அவர் மேலும் தெரி வித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு 1987 ஆம் ஆண்டு துருக்கி விண்ணப்பித்திருந்தது. அது ஒரு அங்கத்தவர் நிலையை 1999 ஆம் ஆண்டு எட்டியபோதும், மனித உரிமைகள் விவகாரம், மற்றும் சைப்பிரஸ் தொடர்பான பிரச்சனைகள் காரணமாக அதன் அங்கத்துவம் 2016 ஆம் ஆண்டு இரத்துச் செய்யப்பட்டிருந்தது.
துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கைகளில் இருந்து நீண்டதூரம் விலகிச் சென்றுள்ளதாக 2018 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்திருந்தது. ஜேர்மனியில் 15 இலட்சம் துருக்கிய மக்கள் வாழ்வது இங்கு குறிப்பிடத்தக்கது.