ஒரு கை துண்டாடப்பட்ட நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு, துண்டிக்கப்பட்ட கையை மீண்டும் பொருத்தி மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சை வெற்றியளித்துள்ளது.
யாழ் போதனா வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் இளஞ்செழியன் பல்லவன் தலைமையிலான மருத்துவ குழுவினர், முழுமையான பங்களிப்பின் மூலம் இந்த சத்திரசிகிச்சை வெற்றியளித்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் எஸ் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளர்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த 23ஆம் திகதி கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவர், ஒரு கை துண்டப்பட்ட நிலையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டார். அவருக்கு பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் இளஞ்செழியன் பல்லவன் தலைமையிலான மருத்துவ குழுவினர் 12 மணித்தியாலங்கள் தொடர் சத்திரசிகிச்சையினை வழங்கினார்கள். இந்த சத்திரசிகிச்சை வெறிறியளித்ததன் பயனாக அவருடைய துண்டாடப்பட்ட கை தற்போது நல்ல நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.” என்றார்.