Tamil News
Home செய்திகள் தீர்மானம் நிறைவேற்றம்- “பாதிக்கப்பட்டவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது” – யாஸ்மின் சூகா

தீர்மானம் நிறைவேற்றம்- “பாதிக்கப்பட்டவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது” – யாஸ்மின் சூகா

இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது “பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது” என்று போர் குற்ற வழக்கு தொடர்புடைய வழக்கறிஞர் யாஸ்மின் சூகா கூறியுள்ளார்.

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக 21 நாடுகளும், எதிராக 11 நாடுகளும் வாக்களிக்க வெற்றிகரமாய் தீர்மானம் நிறைவேறியது.

சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இந்தத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன. இலங்கையின் அண்டை நாடான இந்தியா உள்ளிட்ட 14 நாடுகள் இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் பங்கெடுக்கவில்லை.

இந்நிழைலயில்,தற்போதைய இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராகக் குற்றம் சாட்டப்படும் போர் குற்ற வழக்கு தொடர்புடைய வழக்கறிஞர் யாஸ்மின் சூகா இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது “பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது” என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.

மேலும் உள்நாட்டில் நடவடிக்கைகள் தோல்வியடைந்துள்ளது என்பதையும், பாதிக்கபட்டவர்களுக்கு நீதி கிடைக்க எந்த நம்பிக்கையும் இல்லை என்பதையும் இந்தத் தீர்மானம் உண்மையில் அங்கீகரிக்கிறது என்றும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version