திருமலை மாவட்ட எம்.பி.யாக குகதாசன் சபாநாயகர் முன் சத்தியப்பிரமாணம்

IMG 20240709 WA0017 திருமலை மாவட்ட எம்.பி.யாக குகதாசன் சபாநாயகர் முன் சத்தியப்பிரமாணம்
இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராஜவரோதயம் சம்பந்தர் மறைவினால் ஏற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு சம்பந்தனுக்கு பின்னர் அதிகூடிய விருப்பு வாக்குகளை (16710) பெற்றிருந்த கதிரவேலு சண்முகம் குகதாசன் இன்று நாடாளுமன்றத்தில் திருக்கோணமலை நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டுள்ளார்.