திருமலை பௌத்த விகாரைகள் முதலீடுகளை பாதிக்கும் – சம்பந்தன்

திருமலைமாவட்டத்தில் அமைக்கப்படும் பௌத்தவிகாரைகள் அங்கு சமூக உறுதித்தன்மையில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், வெளிநாட்டு முதலீடுகளையும் பாதிக்கும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் இலங்கை அரச தலைவருக்கு எழுதிய கடித்தில் குறிப்பிட்டுள்ளார்.

திருமலை மாவட்டத்தில் 99 விகிதம் தமிழ் மக்கள் வாழும் இலுப்பைக்குளம் பிரதேசத்தில் விகாரை அமைப்பது அங்கு இன மோதல்களை உருவாக்கும். இதனால் அந்த பிராந்தியத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகளும் பாதிப்படையலாம். இதனை இலங்கை அரசு தவிர்க்க வேண்டும். திருமலை மாவட்டத்தில் மட்டுமல்லாது முழு இலங்கைக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகள் அவசியமானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, திருமலை மாவட்டத்தில் அபிவிருத்தி மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்தியா திட்டமிட்டுள்ள நிலையில் இலங்கை அரசு அங்கு இனமோதல்களை ஏற்படுத்த திட்டமிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.