திருமலையில் 3 மீனவர்களுடன் மீன்பிடிப் படகு மாயம்

திருகோணமலையிலுள்ள திருக்கடவூர் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீன்பிடிப் படகு சீரற்ற காலநிலை காரணமாக காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த படகில் 3 மீனவர்கள் இருந்ததாகவும்  மாயமான படகைத் தேடி 20 படகுகள் காணாமல் போன பிரதேசத்துக்குச் சென்றுள்ளதாகவும் தெரியவருகிறது.

இந்தச் சம்பவம் குறித்து மீன்வளத் திணைக்களம் மற்றும் கடற்படையினருக்கு தாம் அறிவித்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply