திருந்துங்கள் அல்லது போராட்டத்தை எதிர்கொள்ளுங்கள் – அங்கர் நிறுவனத்துக்கு மனோ எச்சரிக்கை

271 Views

திருந்துங்கள் அல்லது எங்கள் போராட்டத்தை எதிர்கொள்ளுங்கள் என அங்கர் நிறுவனத்துக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்த அவரது டுவிட்டர் பதிவு:

நியுசிலாந்து தயாரிக்கும் அங்கர் பால் பட்டர் பொருட்களை இலங்கையில் விற்கும் பொன்டெராலங்கா நிறுவனம் மும்மொழி கொள்கையை சிங்களம், ஆங்கிலம், சீனம் என, தமிழை மறந்து புரிந்துக்கொண்டுள்ளது.

பொன்டெராவுக்கு முன்-அறிவித்தல்! திருந்துங்கள் அல்லது எங்கள் போராட்டத்தை எதிர்கொள்ளுங்கள்!

Leave a Reply