Tamil News
Home ஆய்வுகள் திருத்தந்தை பிரான்சிசும் புவிசார் அரசியலில் ஆசிய மைய நகர்வும் (பகுதி 1) – அருட்பணி எழில்ராஜன்

திருத்தந்தை பிரான்சிசும் புவிசார் அரசியலில் ஆசிய மைய நகர்வும் (பகுதி 1) – அருட்பணி எழில்ராஜன்

திருத்தந்தை பிரான்சிஸ் காலமானார் எனும் செய்தி ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருப்பதும், அடுத்த திருத்தந்தை யார் என்ற ஊகங்கள் வெளிவரத் தொடங்குவதும் வரலாற்றில் புதியது அல்ல. திருத்தந்தையின் வரலாற்றை வெவ்வேறு கோணங்களிலிருந்து அணுக முயற்சிப்பது இயல் பானது. ஆனால் திருத்தந்தை பிரான்சிசின் (ஆட்சிக்காலம்) காலத்தை புவிசார் அரசியல் பரப்பிலிருந்து ஆராயும் பார்வை அதிகரித்திருப்பதை நிராகரிக்க முடியாது.
”திருத்தந்தை பிரான்சிசின் புவிசார் அரசியல்” என்ற நூல் 2019 ல் கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்திருந்ததையும் ஏனைய கட்டுரைகளை யும் சாதாரண தேடல் மூலம் இணையத்தில் வாசிக்கலாம்.
தமிழ் வாசிப்பு ஆய்வுப்பரப்பில் திருத்தந்தை பிரான்சிசின் புவிசார் அரசியலைத் தழுவி பதிப்புகள் வெளிவந்ததாக அறிய முடியவில்லை. இக்கட்டுரை ஏற்கனவே வெளிவந்த ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு தமிழ் வாசிப்புப் பரப்பில் உள்ள வெறுமையை நிரப்ப முனைவதாக அமையும்.
திருத்தந்தை பிரான்சிசின் புவிசார் அரசியலை புரிந்து கொள்வதற்கு அவருடைய இலத்தின் அமெரிக்க புவிசார் அரசியலை விளங்கிக் கொள்வது அதிக தெளிவை கொடுக்கும்.
பத்தொன் பதாம் நூற்றாண்டில் திருச்சபை, கத்தோலிக்க வெளியை நிலப்பரப்பு சார்ந்து புதுப்பித்தல் அல்லது மீளமைத்தல் செயன் முறைக்குள் போக நிர்ப்பந்திக்கப்பட்டது. புதிய உலக நோக்கிலிருந்தும், நிர்வாக ரீதியிலிருந்தும் இவை மேற்கொள்ளப்பட்டாலும் அவற்றிற்கொரு அரசியல் இருப்பதை மறுக்க முடியாது. சர்வதேச தொடர்பாடலில் யதார்த்தவாத கருத்தியலை முன்வைத்து உலக ஒழுங்கு நடைமுறையை ஆய்வு செய்பவர்கள் அரசியல் அதிகார வலுவையும் அவ்வலுவை தக்கவைப் பதற்கான போட்டியையும், இவ்விரண்டிற்கும் இடையேயான உரசலால் ஏற்படுகின்ற அரசியல் பண்பாடு உலக ஒழுங்கை  உருவமைப்பதில் காத்திரமான பங்களிப்பு செய்கிறது என்பதை ஏற்றுக் கொள்கிறார்கள்.
இதிலிருந்தே மத-புவிசார் அரசியல் உருவாகியிருக்கலாம் என்று ஒரு சாரார் கருதுகின்றனர். உரோமை மையமாகக் கொண்ட பேரரசுக் கட்டமைப்பு, வரலாற்றில் பேரரசுக் கட்டமைப்பை மறுசீரமைக்குட்படுத்தி தொடர்ந்தும் தனது அரசாங்கத்தன்மையை மேய்ப்புப் பணிக்கூடாக முன்னெடுத்து ஏனைய பல்துருவ, இருதுருவ, ஒருதுருவ உலக ஒழுங்கில் பேரரசை உருவாக்கி அரசியல் வலுவை ஒரு மையத்தை நோக்கிக் குவிக்க முற்பட்டவர்களுக்கு ஒரு பெரும் சவாலகவே இருந்து வந்துள்ளது.
தற்போதைய தேச-அரசு கட்டமைப்பிலிருந்து அணுகும்போது அவற்றின் நிலவெளி என்பது எப்போதுமே வரையறைக்குட்பட்டது. ஆனால் உரோமய திருச்சபையின் மேய்ப்புப்பணி வெளி மேற்குறிப்பிட்ட தேச-அரச எல்லைகளைக் கடந்து, அதன் அதிகார வரையறைகளையும் தாண்டிய அரசியல் வலுவைக் கொண்டிருந்தது என்பது நோக்கத்தக்கது. இதற்கு காலனித்துவத்தின் பங்கு மிகவும் காத்திரமானது. வரலாற்றில் ஐரோப்பிய-மைய அல்லது மேற்குலக மைய உலக ஒழுங்கை கட்டியெழுப்புவதில் கத்தோலிக்க திருச்சபையின் பங்கை மறுதலிக்க முடியாது. அதே நேரத்தில் காலனித்துவமும், கிறிஸ்தவ மதமும் இணைந்து முன்னெடுத்த நவீனத்துவ நாகரிகமயமாக்குதலில் பல பழங்குடி/பூர்வீக குடிகளின் இன அழிப்பு அரற்கேற்றப்பட்டதையும் திருச்சபை ஏற்றுக் கொண்டுள்ளது. திருச்சபையின் வரலாற்றுத் தவறுகளுக்காக திருத்தந்தை மன்னிப்பு கோரியுள்ளதும் நினைவுகூரப்பட வேண்டியது. மன்னிப்பு கோரியது மட்டும் தீர்வாகாது என்கி ன்ற உண்மையையும் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.
இக்கட்டுரை இலத்தின் அமெரிக்க கத்தோலிக்க திருசுசபையின் கூட்டு அடையாள கட்டமைப்பையும், அது புவிசார் அரசியிலில் செலுத்திய செல் வாக்கையும், இக்கட்டமைப்பிற்கு திருத்தந்தையாக வருமுன்  ஜோர்ஸ் பெர்கோலியோவின் பங்களிப்பையும் அதனைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிசின் புவிசார் அரசியல் கட்டமைப்பில் ஆசியமைய நகர்வையும் அவரது சிறிலங்கா திருப்பயணத்தையும் புவிசார் அரசியல் நோக்கிலிருந்து ஆய்வுக்கு உட்படுத்துகின்றது.
இலத்தின் அமெரிக்க கத்தோலிக்க திருச்சபையும் புவிசார் அரசியலும்திருத்தந்தை ஆறாவது அலெக்சாண்டரின் (1472-1503) ஆணை, Inter Cantera Divine பூகோளத்தை இரு துருவங்களாக்கியது. ஒரு துருவம் ஸ்பெயி னிற்கும், மறு துருவம் போத்துக்கல்லுக்கும் வழங்கப்பட்டது. இவ் ஆணை ஐரோப் பிய கிறிஸ்தவ கால னித்துவத்திற்கு சமய/சட்ட வலுவை வழங்கியது என்றால் மிகையாகாது. இவ்விரண்டு துருவங்களையும் கத்தோலிக்க திருச்சபையே ஒருங்கிணைத்தது. பேரரசுக்கட்டமைப்புகளைக் கடந்து கத்தோலிக்கர்களை ஒருங்கிணைக்கின்ற வலுவை திருச்சபை கொண்டிருந்தது.
பின்-காலனித்துவ அரசியல் வரலாற்றில் புதிய அரசுகளின்  தோற்றம் உருவானதை அரசியல் வரலாறு ஆவணப்படுத்தியுள்ளது. இவ் அரசியல் சூழலில் மதச்சார்பற்ற உலகியல் வாதத்தை முன்வைத்து ஒரு அரசியல் கருத்தியல் வேகமாக முன்னெடுக்கப் பட்டது. இதன் பின்னணியில் அரசும், மதமும் வெவ்வேறானது என்ற பிரிப்பு கட்டமைக்கப்பட்டது. ஆனால் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கத்தோலிக்க திருச்சபை ”மதச்சார்பற்ற அரசு” கோரிக்கைக்கூடாக அதாவது இறையியல் கோட்பாட்டுத் தன்மையில் விட்டுக்
கொடுப்பிற்கு உடன்படாமல் அதன் அரசாங்கத் தன்மையில் நெகிழ்வுத் தன்மையைக் கடைப் பிடித்து தனது அரசியல் வலுவை பயன்படுத்திக் கொண்டே வந்ததென லாம். இதனது ஒரு அலகாக அல்லது உத்தியாக ”இலத்தீன் அமெரிக்க மயமாக்கம்” அறிமுகப் படுத்தப்பட்டு, அது தேச-அரசுகளைக் கடந்த அடையாளத்திற்கூடாக மக்களை ஒன்றிணைத்தது. அதை ஓர் புவிசார் அரசியல் அலகாக அங்கீகரிப்பதன் மூலம் பெருநிலப்பரப்பிற்குரிய கண்டத்திற்குரிய தோற்று வாயாயக பரிணமித்தது.
அமெரிக்க கண்டமயமாக்கலுக்குள் இலத் தின் அமெரிக்கா புவிசார்ந்து உள்வாங்கப்பட் டாலும் அது தனது தனித்துவத்தை தனக்குரிய இலத்தின் அமெரிக்கமயமாக்கலுக்கூடான அடையாளத்தினூடு தக்க வைத்துக் கொண்டது. அரசியல் ரீதியாக இலத்தின் அமெரிக்க திருச்சபை என்கின்ற கூட்டு, தேச – அரசுகளைக் கடந்து கூட்டு குழுமமான ஓர் அரசியல் வலுவாக கட்டமைக்கப்பட தொடங்கி யது,  அதுவே பின்னர் புவிசார் அரசியலில் மிக வும் அரசியல் செல்வாக்கான அங்கமாகியது. அடித்தள மக்கள் தொடக்கம் அரசியல் கொள்கை உருவாக்கம் வரைக்கும் இதனது செல்வாக்கை அவதானிக்க கூடியதாக உள்ளது.
இலத்தின் அமெரிக்க மயமாக்கம் மதத்தை கடந்து அந்த நிலப்பரப்பில் வாழுகின்ற அனைவருக்கும் புதிய அடையாளத்தையும், பரந்த குழுமத்தைச் சேர்ந்த ”கூட்டு” உணர்வையும் ஒருசேரக் குவித்து, ”ஹிஸ்பானிக்” அடையாளத்தை ஊக்குவித்து,  தனித்தன்மையை உறுதியாக உருவாக்க வழி வகுத்தது. மேற்குறிப்பிட்ட இலக்குகளை அடைவதற்காக பல்வேறு இயக்கங்கள் உருவானதை அவதானிக்க முடிகின்றது. ”ஹிஸ்பானிக்” அடையாள வலுவாக்கத்திலும், முன்னெடுப்பிலும் இலத்தின் அமெரிக்க திருச்சபை மிக முற்போ க்குள்ள நிலையை கடைப்பிடித்த தோடு, சமூக மறுசீரமைப்பிற்கும் வழிகோலியது. கருத்தியல் கட்டமைப்புக்கும் அதை அக வயப்படுத்து வதற்குமான செயன்முறைக்கு மிடையே அதிக இடைவெளி இருந்ததாகத் தெரியவில்லை.
புதிய அடையாள ஏற்பை வலியுறுத்தி உருவான அமைப்புக்கள், காலனித்துவத்தை, பேரரசுக்கட்டமைப்பை, ஏகாதிபத்தியத்தை, பொருளாதாரச் சுரண்டலை, கட்டமைக்கப்பட்ட ஏழ்மை போன்றவற்றிற்கெதிராக போராடுகின்ற சூழலை உருவாக்கியது மட்டுமல்லாது; விளிம்பு நிலை, தன்னுணர்வு, மாற்று ”மூன்றாம் வழி”, அபிவிருத்தியடையாத வகையினை கட்ட மைத்து, அபிவிருத்தியடையாத கூட்டை நோக்கி பயணிக்க ஏதுவாகியது. மூன்றாம் வழியான இலத்தின் அமெரிக்க ”அபிவிருத்தி” உத்திக்கூடாக நகருவதற்கு காரணமாக அப் போதைய பூகோள அரசியல் சூழல் இருந்தது. அமெரிக்கா முதலாளித்துவத்தையும், சோவியத் ஒன்றியம் கம்யூனிசத்தையும் கையிலெடுத்து இருதுருவ பூகோள ஒழுங்கை கட்டமைத்தது.
இவையிரண்டிற்குமிடையேயான மாற்றாக ”மூன் றாம் வழி” கட்டமைக்கப்பட்டது. Justificialist  என் கின்ற சமூக செயற்றிட்டம் குறிப்பிடத்தக்களவு பங்களிப்பினை வழங்கியிருந்தது. இக்காலத்தில் எழுந்த அனைத்து புரட்சிகர சமூகமாற்ற செயற்பாடுகளோடும் திருச்சபை தன்னை இணைத் திருந்தது.
இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இலத்தின் அமெரிக்க திருச்சபை, அடிப்படையில் மாற்றம் தேவை எனக் கருதி பண்டுங் மாநாட்டிற்கு இணையான  (Bandung Conference) பிராந்திய மாநாட்டு முன்னெடுப்புக்களை நோக்கி நகர்த்த வேண்டிய வரலாற்றுக் கட்டாயத்திற்குள் வலிந்து  தள்ளப்பட்டது. திருச்சபை ஐரோப்பிய மைய வாதத்தை கொண்டது என விழித்தெழுந்த இலத் தின் அமெரிக்க கூட்டு உளவியல் பிரக்ஞை ஐரோப்பிய-மையவாத நீக்கத்தை வலுவாக ஆதரித்து, விளிம்புநிலைமைய திருச்சபை கட்டமைக்கப்பட வேண்டியதன் தேவையை வலியு றுத்தி அதற்கான வழிவரைபடத்தை தயாரித் துக் கொண்டதை அதன் பின்னர் வெளிவந்த மாநாட்டு ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன. இலத்தின் அமெரிக்க நாடுகளில் கிறிஸ்தவ மக்கள் தொகைப் பெருக்கமும் அவர்கள் எதிர்நோக்கிய அரசியல் யதார்த்தமும், ஏழை மக்களின் வறுமையும், எண்ணிக்கையில் குறைந்த மேட்டுக்குடியினரின் அரசியல், அதிகார பொருளாதார சொத்துக் குவிவும் புதிய வழிமுறைகளைத் திறந்து விட்டது. ”மூன்றாம் உலக” (Third World )கருத்தியலின் உருவாக்கம் இவ்அரசியல் வரலாற்றுச் சூழமை வில் தான் வலுவடையத் தொடங்கியது.
ஜோர்ஜ் பெர்கோலியோ (பின்னாளில் திருத்தந்தை பிரான்சிஸ் – விளிம்பிலிருந்து யதார்த்தத்தை விளங்கிக் கொள்ளல் இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதியில் இலத்தின் அமெரிக்க திருச்சபை தனக்கான புவிசார் அரசி யல் கொள்கைகளை மிகத் தெளிவாக வரைந்து அதற்கான உத்திகளைத் தேர்ந்தெடுத்து நகரத் தொடங்கியது. பெருநிலப்பரப்பிற்குரிய/கண்டத்திற்குரிய அகண்ட அடையாளம் இதற்கு அடித்தள மிட்டது. இதன் முன்னணியில் Juan Diego de Guadalupe குழுமம் மிக முக்கிய பங்காற்றியது. அக் குழுவின் முக்கிய செயற்குழு உறுப்பினராக ஜோர்ஜ் பெர்கோலியா இடம்பெற்றிருந்தார். இக்குழுமம் ”பெர்கோலியா ஆய்வறிஞர்குழு” என்றும் அறியப்பட்டதாக வரலாற்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
தொடரும்…
Exit mobile version