நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பின்னரும் தாங்கள் இந்த சித்திரவதை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த அரசாங்கத்தில் தங்களுக்கு சரியான நீதி கிடைக்கவில்லை என்றும், தற்போதைய அரசாங்கம் தங்களுக்கு சரியான நீதியை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் ஈழத் தமிழர்கள் தொடர்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் குற்ற வழக்குகளில் தொடரபுடையதாக கைது செய்யப்பட்டு 78 இலங்கைத் தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தங்களை விடுவிக்க வேண்டும் எனக் கோரி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த 9ம் திகதி ஆரம்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.