திருக்கோணமலை மாவட்டத்தில் வரலாற்றில் முதல் தடவையாக தேசியக் கட்சி ஒன்றின் மூலமாக ஒரு தமிழர் நாடாளுமன்றம் செல்கின்றார்.-கதிர்.திருச்செல்வம்-தம்பலகமம்

சமஸ்டிக் கட்சி என்றழைக்கப்படுகின்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியானது 1949 டிசம்பர் 19 ஆம் நாள் தந்தை செல்வா என எல்லோராலும் அழைக்கப்படுகின்ற எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்களால் தொடங்கப்பட்டது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி தொடங்கப் பட்ட பின்னர் முதலாவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை 1952 இல் சந்தித்தது. அத்தேர் தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி வடக்குக் கிழக்கிலே இரண்டு(02) உறுப்பினர்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. அதில் ஒன்று திருக்கோணமலை மாவட்டத்தில் அப்போது இருந்து இரண்டு தொகுதிகளில் ஒன்றான திருக் கோணமலைத் தொகுதியில் நவரெட்ணசிங்கம் இரட்ணவரோதயம் இராஜவரோதயம் அவர்கள் 4550 வாக்குகள் பெற்று முதலாவது நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவானார்.

திருக்கோணமலை மாவட்டத்தில் 1952 தொடக்கம் 2020 நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் வரை தேசியக் கட்சிகளின் மூலமாக எந்தவொரு தமிழர்களும் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியிருக்கவில்லை.

ஆனால் 2024.11.14 ஆம் நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் மூலமாக திரு.அருண் ஹேமச் சந்திரா அவர்கள் நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள் ளார். திருக்கோணமலை மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றம் செல்கின்ற முதலாவது தமிழர் என்ற பெருமை அருண் மேச்சந்திரா அவர்களுக்குச் சாரும்.

அத்துடன் திருக்கோணமலைத் தொகுதி இவ்வாண்டுதான் முதன்முதலாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கைகளில் இருந்த பறி போயிருக்கின்றது. இம்முறை தேசிய மக்கள் சக்தி திருக்கோணமலைத் தொகுதியை வென்று வரலாற்றுச் சாதனையைப் படைத்திருக்கின்றது.

நடந்து முடிந்த தேர்தலிலே முக்கிய கட்சிகள் பெற்ற வாக்குகள்:

1.தேசிய மக்கள் சக்தி 87031 வாக்குகளைப் பெற்று 02 உறுப்பினர்களையும்

2.ஐக்கிய மக்கள் சக்தி 53058 வாக்குகளைப் பெற்று 01 உறுப்பினரையும்

3.இலங்கைத் தமிழரசுக் கட்சி 34168 வாக்குகளைப்பெற்று 01 உறுப்பினரையும் பெற்றுக்கொண்டுள்ளன.

இதனைவிட

1.புதிய ஜனநாயக முன்னணி 9387 வாக்குகளையும்

2.ஜனநாயக தேசிய கூட்டமைப்பு 4868 வாக்குகளையும்

3.ஜனநாயக இடதுசாரி முன்னணி 1925 வாக்குகளையும்

4.அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1542 வாக்குகளையும்

5.ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி 1216 வாக்குகளையும்

6.தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 824 வாக்குகளையும் பெற்றிருக்கின்றன.

திருக்கோணமலை மாவட்ட வாக்குகளும் வாக்களிப்பும்:

திருக்கோணமலை மாவட்டத்தில் உள்ள 315925 வாக்குகளில் 218425 வாக்குகள் அளிக்கப் பட்டன.

இது மாவட்ட மொத்த வாக்கின் 69.14 வீதமாகும். இதில் 13537 வாக்குகள் நிராகரிக்கப் பட்டிருந்தன.

ஒப்பீட்டளவில் சிங்கள மக்களின் வாக் களிப்பானது இத்தேர்தலில் குறைவாகவே காணப்பட்டது. சிங்கள மக்களின் வாக்குகளில் அதிகளவான வாக்குகள் தேசிய மக்கள் சக்திக்கே வழங்கப்பட்டிருந்தன.

தேசிய மக்கள் சக்தி பெற்ற வாக்குகள் 87031 ஆகும். இவ்வாக்குகளில் சிங்கள மக்களின் 45000 வாக்குகளும் முஸ்லிம் மக்களின் 27000 வாக்குகளும் தமிழ் மக்களின் வாக்குகளில் 15000 வாக்குகளும் அடங்கும்.

திருக்கோணமலை மாவட்டத்தில் மூன்று இன மக்களும் ஒரே கட்சிக்கு பெருந்தொகையான வாக்குகளை வழங்கியிருப்பது இதுதான் முதல் தடவையுமாகும்.

தேசிய மக்கள் சக்தி 5222 வாக்குகள் அதிகமாகப் பெற்றிருந்தால் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற உறுப்பினர் கிடைக் காது போயிருக்கும். மயிரிழையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தனது உறுப்பினரைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது எனலாம்.

திருக்கோணமலை மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றம் செல்லும் உறுப்பினர்கள்:

தேசிய மக்கள் சக்தியிலிருந்து திரு அருண் ஹேமச் சந்திரா (38368) அவர்களும் திரு றொசான்(25814) அவர்களும் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து திரு இம்ராம் மஹ றூப்(22729) அவர்களும்இலங்கைத் தமிழரசுக் கட்சியிலிருந்து திரு ச.குகதா சன்(18470) அவர்களும் நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர்.

திருக்கோணமலை மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வாக்குச் சரிவு: 

திருக்கோணமலை மாவட்டத்தில் 97867 தமிழ் வாக்காளர்களும் 131811 முஸ்லிம் வாக்காளர்களும்

84253 சிங்கள வாக்காளர்களும் 1163 ஏனைய வாக் காளர்களும் உள்ளனர்.

97867 தமிழ் வாக்காளர்களில் 34168 வாக்கு களை மாத்திரமே இலங்கத் தமிழரசுக் கட்சியினால் பெறக்கூடியதாக இருந்திருக்கின்றது. இது தமிழர் களின் மொத்த வாக்குகளில் அண்ணளவாக 35 வீதமானதாகும்.

2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன் றப் பொதுத்தேர்தலில் இரண்டு உறுப்பினர்களை இலங்கைத் தமிரசுக்கட்சி பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தல்களில் எல்லாம் ஒரு உறுப்பினரையே இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் பெறக் கூடியதாக இருந்ததுடன் கட்சி பெற்றுக் கொண்ட வாக்குகளில் தொடர்ந்து சரி வையே சந்தித்து வந்தது.

திருக்கோணமலை மாவட்டத்தில் நாடாளு மன்றத் தேர்தல் பெறுபெறுகள். இறுதி யுத்தம்  முடிவடைந்ததன் பின்னர் கட்சிக்கான அங்கீகாரத்தினை மக்கள் வழங்கி யிருந்தாலும் கட்சியின் செயற்பாடுகள் நல்ல முறையில் இல்லாமையினால் தமிழ் மக்கள் கட்சியில் வெறுப்படையத் தொடங்கியதுடன் தமது ஆதரவினை மெதுமெதுவாக விலக்கிக் கொள்ளத் தீர்மானித்து விட்டனர் என்பதனையே தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

கட்சியின் செயற்பாடுகள் ஊரக மட்டம் தொடக்கம் மாவட்டம் வரை திறமான வகையில் கட்டமைக்கப்பட்டு மக்கள் நேயச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லையெனில் அடுத்து வரு கின்ற தேர்தல்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சி பாரிய பின்னடைவுகளைச் சந்தித்து தோல்வி களையே தழுவும் என்பதில் ஐயமில்லை.