திருகோணமலை: 20 வருடங்களாக தற்காலிக குடிசைகளில் வாழும் கிளி குஞ்சு மலை கிராம மக்கள்

234 Views

திருகோணமலை மாவட்டம் பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிளி குஞ்சு மலை கிராம மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

IMG 20210425 WA0006 திருகோணமலை: 20 வருடங்களாக தற்காலிக குடிசைகளில் வாழும் கிளி குஞ்சு மலை கிராம மக்கள்

 இதில் பலர் குடிசைகளிலும் தகரக் கொட்டில்களிலும் வாழ்ந்து வருவதாக கவலை வெளியிடுகின்றனர்.

அதிக மழை காரணமாக தங்களது தற்காலிக குடியிருப்பு பகுதியில் இருக்க முடியாதுள்ளதுடன் அடிப்படை வசதியின்றி வாழ்ந்து வருவதாகவும் மேலும் தெரிவிக்கின்றனர்.

IMG 20210425 WA0008 திருகோணமலை: 20 வருடங்களாக தற்காலிக குடிசைகளில் வாழும் கிளி குஞ்சு மலை கிராம மக்கள்

2000ம் ஆண்டு மீள்குடியேற்றப்பட்ட போதிலும் இன்னமும் குடிசை வாழ்க்கை வாழ்வதாகவும்  தெரிவிக்கின்றனர். மன வேதனையுடன் ஏங்கும் இம் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிட்டுமா? என்பதும் கேள்விக்குறியே.

Leave a Reply