திருகோணமலை மாவட்டத்தில்  ஒரே நாளில் 3 பேர் மரணம்-  22 பேருக்கு கோவிட்19 தொற்று

241 Views

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 3 பேர் மரணம் 22 பேருக்கு கொரோனா தொற்று என திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள தகவல்கள்  தெரிவித்துள்ளது.

திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகம்  நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்  இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் இன்று வரைக்கும் 98 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கோவிட்-19 தொற்று இனங் காணப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை மாவட்டத்தில் 3900 பேருக்கு கோவிட்-19 தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் கடந்த ஜூன் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரை 475 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை திருகோணமலை மாவட்டத்தில் 122 பேர் உயிரிழந்துள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply