திருகோணமலையில் 1517 பேருக்கு கொரோனா தொற்று – 12  பேர் பலி

திருகோணமலை மாவட்டத்தில் 1517 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 12 மரணங்கள் பதிவாகியுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டி. ஜீ.எம்.கொஸ்தா தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் கடந்த 2ஆம் திகதி வரை 1517 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 401 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும்,506 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.