தியாக தீபம் தீலீபனின் உருவப்பட ஓவியக்  கீறல்கள் போட்டி

தியாக தீபம் திலீபனின் 36 வது நினைவு நாளை முன்னிட்டு குழந்தைகளிடமிருந்து  “தியாக தீபம் தீலீபனின் உருவப்பட ஓவியக்  கீறல்கள்”  வரவேற்கப்படுவதாக கியூபெக் தமிழ் சமூகம் தெரிவித்துள்ளது.

தியாக தீபம் திலீபனின் 36 வது நினைவு நாளையொட்டி “தியாக தீபம் தீலீபனின் உருவப்பட ஓவியக்  கீறல்கள்” காட்சிப்படுத்தப்படவுள்ளன.. உங்களது குழந்தைகளின் கைவண்ணத்தில் ஓவியம் மற்றும் வண்ணங்களை தியாக  தீபத்திற்கு அர்ப்பணிக்க , நினைவுகூர ஓர் அரிய வாய்ப்பு.

மொன்றியலில் கியூபெக் தமிழ் சமூகத்தால் முன்னெடுக்கப்படும் தியாக தீபம் திலீபனின் 36 வது நினைவு நாள் நிகழ்வில் இந்த ஒவியங்கள் காட்சிப்படுத்தப்படும் மற்றும் நினைவு மின்னிதழிலும் வெளிவரும்.

ஓவியங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் [email protected]

கடைசி திகதி செப்டம்பர் 22,2023

நிகழ்வு நடக்கும் இடம் மற்றும் திகதி விரைவில் அறிவிக்கப்படும்

நன்றி

கியூபெக் தமிழ் சமூகம்