“பார்த்தீபப் பல்லாண்டு…”
நெற்றியிற் திலகம்
நெறிபிறழாச் சத்தியம் நெஞ்சில்
பற்றிய தீயிடை மனதிற் பதித்து
பார்த்தீபம் எரித்தது பகல்வேசம்…
சுற்றிய பகையிடை சுழன்று நின்றாடிய கருவிகள் ஓயக்
கட்டியம் கூறிக் கரிகாலமனம் வென்று பட்டினித்
தீயிடை பற்றிப் படர்ந்ததோர் தியாக தீபம்…
விற்றிட முடியா விடுதலை வேட்கையில்
வீரத் திருநிலம் வெஞ்சினம் கொண்டிடத் தக்கதோர்
பாடம் தனையுவந்தளிக்கத் திக்கெலாம் ஒளியொடு
படர்ந்ததே திலீபயாகம்…
முற்றும், முடிவுறும் முன்னவர் துணைவருமெனக் கத்திக் கிடந்த
கந்தனின் வாசலில் கடைவிழிப் பார்வையும்
கிடைக்காது பற்றிப் படர்ந்த விடுதலைப் பசித்தீ
பல்லாண்டு கூறுதுமே!
-காந்தள்-