தாமரைக் கோபுர நிர்மாணத் திட்டத்தில் 200 கோடி ரூபா மோசடி – சிறிலங்கா அரச தலைவர்

236 Views

தாமரைக் கோபுர நிர்மாணத்திட்டத்திலும் 200 கோடி ரூபா நிதியை சீன நிறுவனமொன்றின் பெயரில் மோசடிசெய்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்துள்ளார்.

தாமரைக் கோபுர நிர்மாணத்திட்டத்திற்கென 2012 ஆம் ஆண்டு நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டபோது குறித்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட எலைய்ட் என்ற சீன நிறுவனத்திற்கு அப்போதைய அரசாங்கம் 200 கோடி ரூபாவை முற்பணமாக வழங்கியது.

அந்த நிறுவனம் 2014ம் ஆண்டு தலைமறைவாகியது. 200 கோடி ரூபாவுக்கு என்ன நடந்ததென்றே தெரியாமல் போனது.

நாம் விசாரணைகளை மேற்கொண்டபோது சீனாவில் அத்தகைய ஒரு நிறுவனம் செயற்படவில்லை என்ற தகவலே எமக்கு கிடைத்தது.

பீஜிங்கில் உள்ள எமது இலங்கை தூதுவரான கருணாசேன கொடித்துவக்குக்கு இது தொடர்பில் நான் அறிவித்தேன்.

தெற்காசியாவின் அதி உயர்ந்த தொலைத் தொடர்பு கோபுரமான தாமரைக் கோபுரம் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

நேற்று மாலை 5.00 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாமரைக் கோபுரத்திற்கான பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்துவைத்து நிகழ்வில் உரையாற்றுகையிலேயே இதனைக் கூறியுள்ளா

Leave a Reply