தாமதமாக நடைமுறைப் படுத்தப்படும் திட்டங்கள் பயனற்றவை -மருத்துவர் நவீன் டி சொய்சா

தாமதமாக நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் பயனற்றவை எனத் தெரிவித்த அரச மருத்துவஅதிகாரிகள் சங்கம், நாடு முடக்கல் நிலையை நோக்கி செல்கின்றது எனவும் எச்சரித்துள்ளது.  

இது குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் மருத்துவர் நவீன் டி சொய்சா தெரிவிக்கையில், “கடந்தவாரம் மிகவும் தீர்க்ககரமானது.  பலவிடயங்களை உடனடியாக அரசாங்கத்தினால் தடுத்து நிறுத்தியிருக்க முடியும். ஆனால் அரசாங்கம் அதனை செய்யவில்லை.

தாமதமாக நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் பயனற்றவை. நாடு முடக்கப்படுவதை நாங்களும் விரும்பவில்லை.  வைரஸ் பரவுவது நாட்டின் பல பாகங்களை முடக்கவேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.